சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற 15-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. 9 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் கென்யா 7 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது.
ஜமைக்க அணி 7 தங்கம் உள்பட 12 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், அமெரிக்கா 6 தங்கம் உள்பட 18 பதக்கங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தன. போட்டியை நடத்திய சீனா ஒரு தங்கம் உள்பட 9 பதக்கங்களுடன் 11-வது இடத்தைப் பிடித்தது. 17 பேர் கொண்ட இந்திய அணிக்கு ஒரு பதக்கம்கூட கிடைக்கவில்லை.
கடைசி நாளான நேற்று நடைபெற்ற ஆடவர் 4x400 மீ. தொடர் ஓட்டத்தில் அமெரிக்க அணி 2 நிமிடம், 57.82 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றது. டிரினிடாட் அன்ட் டொபாக்கோ அணி (2:58.20) வெள்ளியும், பிரிட்டன் (2.58.51) வெண்கலமும் வென்றன.
மகளிர் 4x400 மீ. தொடர் ஓட்டத்தில் ஜமைக்க அணி 3 நிமிடம், 19.13 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கம் வென்றது. கடைசி 50 மீ. தூரத்தில் அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளிய ஜமைக்க அணி, இந்த ஆண்டில் குறைந்த நேரத்தில் இலக்கை எட்டிய அணி என்ற பெருமையையும் பெற்றது. அமெரிக்காவுக்கு (3:19.44) வெள்ளியும், பிரிட்டனுக்கு (3:23.62) வெண்கலமும் கிடைத்தன.
கிப்ரோ ஹாட்ரிக்
ஆடவர் 1,500 மீ. ஓட்டத்தில் கென்யாவின் ஆஸ்பெல் கிப்ரோப் தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கம் வென்று சாதித்துள்ளார். நேற்றைய போட்டியில் அவர் 3 நிமிடம் 34.40 விநாடிகளில் இலக்கை எட்டினார். அவருக்கு அடுத்தபடியாக மற்றொரு கென்ய வீரரான எலிஜா மனன்கோய் (3:34.63) வெள்ளியும், மொராக்கோவின் அப்தலாட்டி குய்டர் (3:34.67) வெண்கலமும் வென்றனர்.
மகளிர் 5,000 மீ. ஓட்டம்
மகளிர் 5 ஆயிரம் மீ. ஓட்டத்தில் எத்தியோப்பியாவின் அல்மாஸ் அயானா, சகநாட்டவரான ஜென்ஸிபே டிபாபாவை பின்னுக்குத் தள்ளி 14 நிமிடம் 26.83 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். எத்தியோப்பியாவின் சென்பரே டெஃப்ரியை (14:44.07) வெள்ளிப் பதக்கத்தை வென்றார். டிபாபாவுக்கு (14:44.14) வெண்கலம் கிடைத்தது.
மகளிர் ஈட்டி எறிதல்
மகளிர் ஈட்டி எறிதல் போட்டியில் ஜெர்மனி வீராங்கனை கேத்தரினா மாலிட்டர் தனது கடைசி வாய்ப்பில் 67.69 மீ. தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். சீனாவின் லியூ ஹுஹுய் (66.13 மீ.) வெள்ளி வென்றதோடு, ஆசிய சாதனையையும் படைத்தார். தென் ஆப்பிரிக்காவின் சுனெட்டே வில்ஜோன் (65.79) வெண்கலம் வென்றார்.
மாரத்தான்
மகளிர் மாரத்தான் போட்டியில் எத்தியோப்பியாவின் மேர் திபாபா 2 மணி, 27 நிமிடம், 35 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். அவரை விட ஒரு விநாடி பின்தங்கிய கென்யாவின் ஹெலா கிப்ரோப் வெள்ளியும், பஹ்ரைனின் யூனிஸ் கிர்வா (2:27:39) வெண்கலமும் வென்றனர். இந்தியாவின் ஓ.பி.ஜெய்ஷா 18-வது இடத்தைப் பிடித்தார். எனினும் அவர் 2 மணி, 34 நிமிடம், 43 விநாடிகளில் இலக் கை எட்டியதன் மூலம் தேசிய சாதனை படைத்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago