பும்ரா, ஷமி, ஜடேஜா ஆகியோரின் பிரமாதமான டெத் பவுலிங்கால் ஆக்லாந்தில் நடந்துவரும் 2-வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 133 ரன்கள் நிர்ணயித்துள்ளது நியூஸிலாந்து அணி.
டாஸ்வென்று முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இந்திய வீரர்களின் பந்துவீச்சுக்கு நியூஸிலாந்து அணி எவ்வாறு திணறியதோ அதேபோன்று நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சுக்கும் இந்திய வீரர்கள் ரன்சேர்க்கத் திணறுவார்கள். கடந்த போட்டியில் இருந்த வேகமான ஆடுகளமாக இல்லாமல் ஸ்லோ டிராக் அமைக்கப்பட்டு பந்துவீச்சுக்குச் சாதகமாக இருப்பதால், போட்டி கடும் நெருக்கடியில்தான் செல்லும்
நியூஸிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் தொடக்கத்தில் அமைத்துக் கொடுத்த வலுவான அடித்தளத்தை அடுத்துவந்த நடுவரிசை பேட்ஸ்மேன்கள் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டதுதான் ஸ்கோர் குறைவுக்குக் காரணமாகும். அணியில் அதிபட்சமாக கப்தில் 33, ஷீபெர்ட் 33 ரன்கள் சேர்த்தனர்.
கடந்த போட்டியில் ஆடுகளத்தின் லைன்-லென்த் குறித்து அறியாமல் திணறிய இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் இந்த ஆட்டத்தில் மிகச்சரியாக நியூஸிலாந்து அணிக்கு எதிராகப் பந்துவீசினார்கள்.
அதிலும், ஷமி, பும்ரா ஆகியோரின் பந்துகள் நியூஸாந்து வீரர்களுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்தது. தன்னுடைய அனுபவமான சுழற்பந்துவீச்சாளர் ஜடேஜா நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களை திணறவிட்டது மட்டுமல்லாமல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
பும்ரா 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் ஒரு விக்கெட்டையும், ஷமி 22 ரன்களையும் வழங்கினார். ஜடேஜா 4ஓவர்கள் வீசி18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நியூஸிலாந்து அணியில் கப்தில், முன்ரோ ஆட்டத்தைத் தொடங்கினர். ஷர்துல் தாக்கூர் வீசிய முதல் ஓவரிலேயே கப்தில் இரு சிக்ஸர்கள் விளாசி அருமையான தொடக்கத்தை அளித்தார். முன்ரோ நிதானமாக பேட் செய்ய, கப்தில் அதிரடியாக பவுண்டரி,சிக்ஸர்கள் விளாசினார்.
தாக்கூர் வீசிய 6-வது ஓவரில் இரு பவுண்டரிகள் அடித்த நிலையில் கடைசிப்பந்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்து 33 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடங்கும். முதல் விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்தனர். பவர்-ப்ளே முடிவில் நியூஸிலாந்து அணி 48 ரன்கள் சேர்த்தது.
அடுத்து வந்த வில்லியம்ஸன், முன்ரோவுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாகவே விளையாடினர். துபே வீசிய 9-வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்த முன்ரோ 26 ரன்கள் சேர்த்த நிலையில் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த கோலின் டி கிராண்ட்ஹோம் கடந்த போட்டியைப் போலவே இந்தமுறையும் விரைவாக ஆட்டமிழந்தார். ஜடேஜா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து 3 ரன்னில் கிராண்ட்ஹோம் பெவிலியன் சென்றார்.
81 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது நியூஸிலாந்து அணி11 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.
வில்லியம்ஸன், டெய்லர் 5-வது விக்கெட்டுக்கு சேர்ந்து கடந்த போட்டி போன்று கலக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜடேஜா வீசிய 13-வது ஓவரில் 'டீப் ஸ்குயர் லெக்' திசையில் சாஹலிடம் கேட்ச் கொடுத்து வில்லியம்ஸன் 14 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ஷீபெர்ட், டெய்லருடன் சேர்ந்தார்.
நியூஸிலாந்து அணியைக் கட்டுக்குள் கொண்டுவந்த பின், இந்திய வீரர்கள் நெருக்கடி தரும் விதத்தில் பந்துவீசினர். இந்திய வீரர்களின் பந்தவீச்சில் ரன் எடுக்க டெய்லரும், ஷபர்ட்டும் கடும் சிரமப்பட்டனர்.சாஹல் வீசிய 16-வது ஓவரில் ஷீபெர்ட் சிக்ஸர், பவுண்டரி விளாசி ஸ்கோரை உயர்த்தினார். கடந்த முறை அதிரடி காட்டிய டெய்லர் இந்தமுறை ரன் சேர்க்கத் திணறினார்.
பும்ரா வீசிய 20வது ஓவரில் டீப் ஸ்குயர் லெக் திசையில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து டெய்லர் 18 ரன்னில் வெளியேறினார். ஷீபெர்ட் 33 ரன்களிலும், சான்ட்னர் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்
20 ஓவர்கள் முடிவில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago