இந்திய அணி ஒரு பவர் ஹவுஸ்; நியூஸி. பாஸ் மார்க் வாங்குமா? - முன்னாள் நியூஸி.  ‘கிரேட்’ கேள்வி

By செய்திப்பிரிவு

நியூஸிலாந்துக்கு இந்திய அணி 5 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக சென்றுள்ள நிலையில் நியூஸிலாந்தின் முன்னாள் அதிரடி வீரர் கிரெய்க் மெக்மில்லன், 3 வடிவங்களிலும் இந்திய அணி ஒரு பவர் ஹவுஸ் என்று புகழ்ந்து கூறியுள்ளார்.

ஒருமுறை தோனி கேப்டன்சியில் சச்சின், சேவாக், கம்பீர், யூசுப் பத்தான், தோனி என்று அதிரடி வரிசை அமைந்ததைப் போல்

ரேடியோ ஸ்போர்ட்ஸ் பிரேக்பாஸ்ட்டில் கிரெய்க் மெக்மில்லன் கூறியதாவது:

இந்திய அணி ஒரு பவர் ஹவுஸ், அது ஒருநாள், டி20, டெஸ்ட் கிரிக்கெட் என்று எதுவாக இருந்தாலும் சரி. எனவே இந்தத் தொடர் மிகவும் சவாலான ஒன்று. நியூஸிலாந்து அணி இதில் பாஸ்மார்க் எடுக்க வேண்டுமெனில் 3 தொடர்களில் இரண்டைக் கைப்பற்றியாக வேண்டும்.

முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், ஆஸ்திரேலியாவில் உலகக்கோப்பை இருப்பதால் நிச்சயம் இந்த டி20 தொடரில் சிறப்பாக ஆடி தொடரைக் கைப்பற்ற வேண்டும். ஆஸ்திரேலியாவில் வெல்ல வேண்டுமெனில் இங்கு வெல்வது அவசியம்.

டி20யைப் பொறுத்தவரை இன்னும் சிறந்த நியூஸி. அணி எது என்பதை சோதித்து வருகின்றனர். சூப்பர் ஸ்மாஷ் தொடர் இப்போதுதான் முடிந்தது, இதில் நன்றாக ஆடிய இளம் வீரர்களுக்கு நியூஸிலாந்து அணியில் வாய்ப்பளிக்க இடமுண்டு, என்றார் மெக்மில்லன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்