ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் அதிவேக 100 விக்கெட்டுக்கள் சாதனைக்கு உரிய ஸ்பின்னரானார் இடது கை சைனமேன் பவுலர் குல்தீப் யாதவ்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ராஜ்கோட் ஒருநாள் போட்டியில் நேற்று இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தினார். அலெக்ஸ் கேரி விக்கெட்டை அவர் 38வது ஓவரில் வீழ்த்திய போது 100 விக்கெட் மைல்கல்லை எட்டினார்.
ஸ்பின்னர்களில் ஹர்பஜன் சிங் 76 போட்டிகளில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்ற குல்தீப் யாதவ் நேற்று தன் 58வது போட்டியில் 100 விக்கெட் சாதனையை நிகழ்த்தினார்.
முகமது ஷமி 56 போட்டிகளிலும், பும்ரா 57 போட்டிகளிலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட் மைல்கல்லை எட்ட, குல்தீப் யாதவ் 58 போட்டிகளில் எட்டி 3ம் இடத்தில் திகழ்கிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 2 ஹாட்ரிக்குகளை எடுத்து கடந்த ஆண்டு சாதனை புரிந்தவர் குல்தீப் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜ்கோட்டில் நேற்று அவர் அலெக்ஸ் கேரி மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தை ஒரே ஓவரில் வீழ்த்தியது இந்தியாவை வெற்றியை நோக்கி திருப்பியது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago