இந்திய அணியின் மோசமான முடிவு: கவுதம் கம்பீர் கடும் விமர்சனம்  

By செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரவிருக்கும் ஒருநாள் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சை ஆஸ்திரேலிய வீரர்கள் சமாளிக்கக் கஷ்டப்படுவார்கள் என்று கூறிய கவுதம் கம்பீர் அணியில் மொகமது ஷமியை தேர்வு செய்வது அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

மேலும் உலகக்கோப்பை அரையிறுதியில் ஷமியைத் தேர்வு செய்யாதது படுமோசமான முடிவு என்று சாடினார் கவுதம் கம்பீர்.

கவுதம் கம்பீர் ஸ்டார் ஸ்போர்ட்ஸில், “பும்ரா, ஷமி ஆகியோர் ஆஸ்திரேலியாவின் டாப் வீரர்களான வார்னர், பிஞ்ச், ஆகியோருக்கு எப்படி வீசுகின்றனர் என்பதைப் பார்க்க சுவாரஸ்யமாக உள்ளது, அதுவும் மட்டை பிட்சில் அவர்கள் இருக்கும் பார்மில் எப்படி அவர்களைக் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.

ஆனால், ஷமி, பும்ராவின் பந்து வீச்சில் நல்ல வேகம் உள்ளது, வெறும் வேகத்தில் அவர்கள் விக்கெட்டுகளை கைப்பற்ற முடியும். காற்றிலும் இவர்கள் பந்து வேகமாகச் செல்லும்.

இருவரும் அடுத்தடுத்த ஓவர்களை வீசுவது பார்ப்பதற்கே மிக சுவாரஸ்யமாக இருக்கும். அதனால்தான் உலகக்கோப்பை அரையிறுதியில் ஷமி ஆடாதது ஏமாற்றமாக இருந்தது. ஒட்டுமொத்த உலகக்கோப்பையிலும் எடுத்த மிக மோசமான முடிவு இதுவாகத்தான் இருக்கும், அதுவும் ஷமி இருக்கும் பார்மில் அவரை உட்கார வைத்தது சிக்கல்தான்.

ஷமி மட்டும் ஆடியிருந்தால், பும்ராவுடன் சேர்ந்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார். புதிய பந்தில் இருவரும் அந்த வேகத்தில் வீசும் போது நிச்சயம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களுக்குச் சிக்கல்தான்.

சிறிய மைதானங்கள், மட்டை பிட்ச்களில் ஷமி நன்றாக வீசக்கூடியவர், இத்தகைய மைதானங்களில்தான் பவுலர்கள் பாடு திண்டாட்டம் அவர்கள் இங்குதான் சிறப்பாக வீச முயற்சி எடுக்க வேண்டும். ஷமி இருக்கும் பார்மில் இந்தக் கவலை இல்லை என்றே கருதுகிறேன்

பும்ரா காயத்திலிருந்து வந்துள்ளார் ஆனாலும் அவர் தரமான பவுலர்.

பேட்டிங்கில் இந்திய மிடில் ஆர்டருக்கு சோதனை உள்ளது, ஏனெனில் ஆஸ்திரேலியாவில் மிட்செல் ஸ்டார்க், பாட் கமின்ஸ், ஆகியோர் இந்திய 5,6,7 நிலை பேட்ஸ்மென்களுக்கு கஷ்ட காலத்தைக் கொடுப்பார்கள்.

5,6,7-ல் இறங்குபவர்கள் இலங்கை, வங்கதேசத்துக்கு எதிராக வேண்டுமானால் ரன்கள் எடுக்க முடியும், ஆனால் ஆஸி. போன்ற வலுவான எதிரணியிடம் அவ்வளவு சுலபமல்ல. முதல் 4 வீரர்கள் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே இவர்கள் பேட்டிங்கும் அமையும்.

கடந்த முறை இங்கு வந்து ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா வென்றனர். அப்போது மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட் இல்லை, இப்போது அவர்களும் இருப்பதால் மேலும் கடினமே.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்