ஐ லீக் கால்பந்து தொடரில் கோகுலம் கேரளா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது நடப்பு சாம்பியனான சென்னை சிட்டி எப்சி.
கோழிக்கோட்டில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 45-வது நிமிடத்தில் ராம் பூபதி உதவியுடன் பந்தை பெற்ற பிட்டோ, பாக்ஸின் மையப் பகுதியில் இருந்து வலது கார்னரை நோக்கி கோல் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதியில் சென்னை சிட்டி 1-0 என முன்னிலை பெற்றது. அடுத்த 10-வது நிமிடத்தில் சென்னை சிட்டி தனது 2-வது கோலை அடித்தது. இந்த கோலை பாக்ஸின் மையப் பகுதியில் இருந்து இடது கார்னரை நோக்கி பிரவிட்டோ ராஜூ அடித்தார். 77-வது நிமிடத்தில் சையது சுஹைல் பாஷா உதவியுடன் ராம் பூபதி கோல் அடிக்க சென்னை சிட்டி அணி தனது முன்னிலையை 3-0 என அதிகரித்தது.
81-வது நிமிடத்தில் கோகுலம் கேரளா அணி பதில் கோல் அடித்தது. அந்த அணியின் ஷிபில் முகமது இந்த கோலை அடித்தார். தொடர்ந்து 90-வது நிமிடத்தில் ஷிபில் முகமது மீண்டும் கோல் அடிக்க கோகுலம் கேரளா அணி 2-3 என நெருங்கியதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் இறுதி கட்ட நிமிடங்களில் மேற்கொண்டு கோல்கள் வாங்காமல் பார்த்துக் கொண்டது சென்னை சிட்டி எப்சி. முடிவில் சென்னை சிட்டி எப்சி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago