2020ம் ஆண்டில் இந்திய அணி மேற்கொள்ள உள்ள பயணம், எந்த அணியுடன் எங்கெங்கு விளையாடப் போகிறது, என்னென்ன போட்டிகளில் விளையாடப் போகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிரிக்கெட்டில் ஒரு அணி பாரம்பரியம் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக விளையாடினால்தான் வீரர்களை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு அடையாளம் காண முடியும்.
ஆனால், இந்திய அணி இந்த ஆண்டு குறைவான அளவே டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அதிலும் நியூஸிலாந்தில் 2 டெஸ்ட் போட்டிகளிலும், ஆஸியில்4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வகையில் இந்திய அணிக்கு பயணத்திட்டம் அமைக்கப்படுள்ளதே தவிர, இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டி கூட பட்டியலிடப்படவில்லை.
அதிலும் இந்த ஆண்டு இந்திய அணிக்கு சவாலாக இருக்கும் வகையில் ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்பிரிக்க அணியுடன் ஒருநாள் தொடர், நியூஸிலாந்து அணியுடன் முழுமையான தொடர், இங்கிலாந்து அணியுடன் ஒருநாள் தொடர், ஆஸ்திரேலியப் பயணத்தில் டெஸ்ட், ஒருநாள் தொடர் என சவாலான தொடர்கள் காத்திருக்கின்றன.
முதலில் இலங்கை அணி 2020, ஜனவரி 5-ம்தேதி முதல் ஜனவரி 10-ம்தேதி வரை 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்காக இலங்கை அணி இந்தியாவுக்கு வந்து சேர்ந்துவிட்டது.
இலங்கையுடன் டி20 தொடர்
முதல் ஆட்டம் குவஹாத்தியில் உள்ள பரஸ்பரா மைதானத்தில் வரும் 5-ம்தேதி நடக்கிறது. 2-வது டி20 போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்திலும், 3-வது மற்றும் கடைசி டி20ப போட்டி புனேயில் உள்ள எம்சிஏ மைதானத்திலும் நடக்கிறது.
இலங்கையுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
ஆஸி.யுடன் ஒருநாள் தொடர்
ஜனவரி 14-ம் தேதி மும்பையில் உள்ள வான்கெடே மைதானத்தில் இந்தியா-ஆஸி இடையே முதலாவது ஒருநாள் ஆட்டம் நடக்கிறது. அதன்பின் 2-வது ஆட்டம் ராஜ்கோட்டில் வரும் 17-ம் தேதி சவுராஸ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. கடைசி மற்றும் 3-வது போட்டி பெங்களூரு சின்னச்சாமி அரங்கில் 19-ம் தேதி நடக்கிறது.
ஒருமாதம் பயணம்
இந்த தொடரை முடித்துக்கொண்டு இந்திய அணி ஒருமாதம் நியூஸிலாந்துக்கு பயணம் மேற்கொள்கிறது. ஜனவரி 24-ம் தேதி முதல் மார்ச் 4-ம் தேதி வரை இந்திய அணி நியூஸிலாந்தில் பயணம் மேற்கொள்கிறது.
நியூஸிலாந்து அணியுடன் 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் ஆகியவற்றில் இந்திய அணி விளையாட உள்ளது.
டி20 தொடர்
முதலில் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. வரும் 24-ம் தேதி ஆக்லாந்தில் முதல் டி20 போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் இந்திய அணி மோதுகிறது.
2-வது டி20 போட்டி 26-ம் தேதி ஆக்லாந்திலும், 3-வது போட்டி ஹேமில்டனிலும் இந்தியா, நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. 4-வது டி20 போட்டி வெலிங்டனில் ஜனவரி 31-ம்தேதியும், கடைசி மற்றும் 5-வது டி20 போட்டி பிப்ரவரி2-ம் தேதி மவுண்ட் மவுங்கானியில் நடக்கிறது
ஒருநாள் தொடர்
பிப்ரவரி 5-ம் தேதி ஹேமில்டனில் இந்தியா,நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே முதலாவது ஒருநாள் ஆட்டம் நடக்கிறது. 2-வது ஆட்டம் ஆக்லாந்தில், பிப்ரவரி 8-ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் மவுண்ட் மவுங்கானியில் 11-ம் தேதி நடக்கிறது.
டெஸ்ட் தொடர்
இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 21-ம் தேதி வெலிங்டனில் நடக்கிறது.2-வது டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் 29-ம் தேதி நடக்கிறது.
தென் ஆப்பிரிக்கவுடன் ஒருநாள் தொடர்
நியூஸிலாந்து பயணத்தை முடித்துக் கொண்டு மார்ச் மாதம் தொடக்கத்தில் இந்திய அணி தாயகம் திரும்புகிறது. ஒருவாரம் இடைவெளியில் தென் ஆப்பிரிக்க அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.
முதலாவது ஒருநாள் ஆட்டம் தரம்சலாவில் மார்ச் 12-ம்தேதி இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடக்கிறது. அதன்பின் 2-வது ஆட்டம் லக்னோவில் மார்ச் 15-ம் தேதியும்,3-வது மற்றும் கடைசி ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் மார்ச் 18-ம் தேதி நடக்கிறது.
இந்த ஒருநாள் தொடர் முடிந்தவுடன் இந்தியாவில் ஐபிஎல் டி20 போட்டித் தொடர் தொடங்கிவிடும். மார்ச் 28-ம் தேதி முதல் மே 24ம்தேதிவரை நடக்கும் போட்டியில் இந்திய அணி வீரர்கள் பரபரப்பாக இருப்பார்கள்.
அதன்பின் ஒருமாத காலம் இந்திய அணிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அதன்பின் மீண்டும் பரபரப்பான தொடருக்குள் இந்திய அணி நுழைகிறது.
ஜூலை மாதம் இந்திய அணி இலங்கைக்குப் பயணம் மேற்கொள்கிறது. இலங்கை அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. இதற்கான தேதிகள் இன்னும் முடிவாகவில்லை.
ஆசியக் கோப்பை
செப்டம்பர் மாதம் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் நடக்க உள்ளது. இந்த போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா விளையாடுமா என்பது உறுதி செய்யப்படவில்லை. இந்திய அணியும் பங்கேற்பது குறித்து ஆலோசித்து வருகிறது.
இந்தியா வரும் இங்கிலாந்து
செப்டம்பர் முதல் அக்டோபர் மாதத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்தபோட்டித்தொடரின் தேதிகளும் இன்னும் முடிவாகவில்லை.
இந்த தொடரை முடித்துக் கொண்டு ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடக்கும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் விளையாட இந்தியா பயணிக்கிறது.
ஆஸி. தொடர்
ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி விளையாடி முடித்தபின் அங்கேயே இந்திய அணி தங்குகிறது. ஆஸ்திரேலிய அணியுடன் 3 ஒருநாள் போட்டிகளிலும், 4 டெஸ்ட் போட்டித்தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது இதில் ஒரு போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாகவும், ஒரு போட்டி பிங்க் பந்தில் விளையாடும் பகலிரவு போட்டியாகவும் இருக்கும். இதற்கான தேதிகளும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago