இலங்கைக்கு எதிரான குவஹாத்தி டி20: இந்திய அணி வருகையில் குழப்பம்

By செய்திப்பிரிவு

புத்தாண்டுக்கு முன்பாக கிரிக்கெட்டிலிருந்து தேவையான ஓய்வு பெற்ற இந்திய அணியினர் இலங்கைக்கு எதிராக ஞாயிறன்று குவஹாத்தியில் முதல் டி20 போட்டியில் மோதுகின்றனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக அங்கு போராட்டங்கள் நிகழ்ந்த நிலையில் இந்திய அணியின் வருகையில் சிறு குழப்பம் நிலவியது, இதனையடுத்து பிசிசிஐ மற்றும் அசாம் கிரிக்கெட் சங்கம் அங்குள்ள நிலைமைகளை நெருக்கமாக அவதானித்து வருகின்றன. தற்போது சூழ்நிலைகள் கட்டுப்பாட்டில் இருப்பதாக அசாம் கிரிக்கெட் சங்க த்லாஇவர் ரூமன் தத்தா கூறியுள்ளார்.

ஐ.எ.என்.எஸ். செய்தி ஏஜென்சியிடம் தத்தா கூறும்போது, “ஆம், சிறிது அமைதியின்மை இருந்தது, இந்திய அணி வருகையில் குழப்பம் இருந்தது, ஆனால் இப்போது அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன. ஸ்டேடியத்தை போலீஸார் வசம் ஒப்படைத்து விட்டோம். எனவே போலீஸார் அனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.” என்றார்.

இந்திய வீரர்கள் வெள்ளிக்கிழமைதான் மைதானத்துக்கு வருகின்றனர் என்ரு கூறப்பட்டது, ஆனால் இந்திய அணி நிர்வாகம் வியாழன் இரவே இந்திய அணி குவஹாத்தி வந்து விடும் என்றனர்.

“இலங்கை அணி இன்று வருகிறது” என்றார் தத்தா, இந்திய அணி வீரர் ஒருவர், “இன்று இரவு நாங்களும் வந்து விடுவோம்” என்றார்.

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்காக இந்திய அணி சரியான வீரர்களை அடையாளம் கண்டு வருகிறது. இலங்கைக்கு எதிராக பும்ரா ஆடுவார் என்று எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்