சென்சூரியனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்தை வீழ்த்தியதை இந்திய ரசிகர் ஒருவர் கேலி பேசியதையடுத்து அந்த ரசிகருக்கு தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் பதிலடி கொடுத்துள்ளார்.
இங்கிலாந்தை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 1-0 என்று முன்னிலை வகித்ததையடுத்து ஸ்டெய்ன் தன் ட்விட்டர் பக்கத்தில் கேப்டன் டுபிளேசிஸை பாராட்டி பதிவிட்ட போது, “வெல் டன். மார்க் பவுச்சரும், டுபிளேசிசும் பசியுடன் காத்திருக்கும் அணியை ஒருங்கிணைத்துள்ளனர். திறமையை நோக்கிய இவர்களது நோக்கம் அச்சுறுத்தலாக அமைந்தது. ஸ்மித் தலைமையில் நான் ஆடிய போதிருந்த அனைத்து குணாம்சங்களும் இந்த அணியில் திரும்பியுள்ளன. மீண்டெழுந்ததைப் பார்ப்பது பெரிய மகிழ்ச்சி.” என்று ட்வீட் செய்திருந்தார்.
இந்த ட்விட்டர் பதிவுக்கு இந்திய ரசிகர் ஒருவர் பின்னூட்டம் இடுகையில், இந்த வெற்றியை பெரிதுபடுத்தக் கூடாது, சொந்த நாட்டில் வெல்வதில் என்ன இருக்கிறது என்ற தொனியில் கிண்டலாக தெரிவித்திருந்தார்.
இந்திய ரசிகரின் இந்தக் கருத்துக்கு பதிலடி கொடுத்த டேல் ஸ்டெய்ன், “இப்படி கூறினால் இந்தியாவில் இந்திய அணி பெற்ற வெற்றிகளும் கணக்கில் சேராது... இடியட்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தென் ஆப்பிரிக்கா தன் கணக்கைத் தொடங்கியுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago