உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அங்கமாக 2023-ம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை 4 நாட்களாக குறைத்து நடத்துவதை கட்டாயமாக்குவது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
ஐசிசி கிரிக்கெட் குழுவானது 2023-ம் ஆண்டு முதல் 2031-ம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில் நடத்த திட்டமிடப்படும் டெஸ்ட் போட்டிகளை 5 நாட் களுக்கு பதிலாக 4 நாட்களாக குறைத்து நடத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது.
ஐசிசி உலகளாவிய தொடர்களை அதிகம் நடத்த விரும்புகிறது, அதேவேளையில் இந்திய கிரிக் கெட் வாரியம் இருதரப்பு போட்டிஅட்டவணையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
இதுதவிர உலகெங்கிலும் நடத்தப்பட்டு வரும் தொழில் முறை டி 20 தொடர்களின் பெருக்கம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 நாட்கள் போட்டியை நடத்துவதற்கான செலவு ஆகியவை டெஸ்ட் போட்டியை 4 நாட்களாக குறைப்பதற்கான சில முக்கியமான காரணிகளாக இருக்கக்கூடும் என கருதப்படுகிறது.
இந்த வகையில் 2015 முதல் 2023-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களாக குறைத்து நடத்தியிருந்தால் 335 நாட்கள் மீதம் கிடைத்திருக்கும் என ஐசிசி கருதுகிறது. மேலும் 4 நாட்கள் டெஸ்ட் போட்டி ஒன்றும் புதிய கருத்து இல்லை. இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து - அயர்லாந்து அணிகள் 4 நாட்கள் கொண்ட டெஸ்டில் மோதின. இதே பாணியில் கடந்த 2017-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகளும் விளையாடி இருந்தன.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைவர் கெவின் ராபர்ட்ஸ் கூறும்போது, “4 நாட்கள் கிரிக்கெட் என்பது தீவிரமாக பரிசீலிக்க கூடியதுதான். இதை உணர்ச்சியால் அணுக முடியாது, ஆனால் உண்மை நிலையை கருதி அணுகப்பட வேண்டும். நேரம், ஓவர்கள் அடிப்படையில் கடந்த 5 முதல் 10 ஆண்டுகளில் சராசரியாக டெஸ்ட் போட்டி முடிவுற்ற நாட்கள் எத்தனை என்பதை நாம் கவனிக்க வேண்டும்” என்றார். - பிடிஐ
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago