2019-ம் ஆண்டில் முதன்முதலாக இங்கிலாந்து ஐசிசி உலகக்கோப்பையை வென்றது பெரிய ஒரு விஷயம் என்றாலும் அதன் பெருமை இயன் மோர்கனுக்குச் செல்கிறது. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் ஜோ ரூட்டுக்கு மிகப்பெரிய வெறுப்பூட்டிய ஆண்டாக 2019 திகழ்கிறது.
2019- தொடக்கத்தில் மே.இ.தீவுகளில் டெஸ்ட் தொடரை இழந்தார், ஆண்டை முடிக்கும் போது செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தோல்வியடைந்தது.
2019-ல் 12 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய இங்கிலாந்து 6 போட்டிகளில் தோல்வியடைந்து 4-ல் வென்று இரண்டை ட்ரா செய்துள்ளது. ஆண்டின் தொடக்கத்தில் கரீபியனில் மே.இ.தீவுகளுக்கு எதிராக டெஸ்ட் தொடரை 1-2 என்று இழந்தது இங்கிலாந்து, பிறகு அயர்லாந்து அணிக்கு எதிராக முதல் டெஸ்ட்டை ஏறத்தாழ தோற்றிருக்கும், பிறகு ஆஷஸ் தொடரை 2-2 என்று டிரா செய்து ஆஷஸ் கோப்பையை மீண்டும் இங்கிலாந்துக்குக் கொண்டு வரத் தவறியது.
பிறகு நவம்பரில் நியூஸிலாந்திடம் 1-0 என்று 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இழந்தது. நேற்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 107 ரன்களில் முதல் டெஸ்ட்டை இழந்தது.
இங்கிலாந்து ரசிகர்களுக்கு 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை வெற்றி தந்த மகிழ்ச்சியுடன் பென் ஸ்டோக்ஸ் அதியற்புதமாக ஆடி 135 ரன்கள் விளாசி சாத்தியமே இல்லாத ஒருவெற்றிக்கு நம்பமுடியாத வகையில் இட்டுச் சென்ற மகிழ்ச்சியும் உள்ளது.
2018 நவம்பரில் இலங்கையில் டெஸ்ட் தொடரை 3-0 என்றுவெற்றி பெற்றதையடுத்து தன் இளம் அணி 2019-ல் உலக டெஸ்ட் கிரிக்கெட்டை கலக்கும் என்று பெரிய எதிர்பார்ப்புக் கொண்டிருந்தார் ஜோ ரூட், ஆனால் அதில் தொடர் தோல்விகளினால் மண் விழுந்தது.
2020-ல் இன்னும் கடினமாகும் தென் ஆப்பிரிக்க தொடரில் 3 டெஸ்ட் போட்டிகள் உள்ளன, பிறகு மார்ச்சில் இங்கிலாந்து அணி இலங்கை செல்கிறது. பிறகு கோடைக்காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியையும், பாகிஸ்தான் அணியையும் டெஸ்ட் தொடர்களில் தங்கள் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது.
எனவே 2020 ஜோ ரூட்டுக்கு கஷ்டகாலம் தான். இதிலிருந்து மீண்டு அவர் கேப்டன்சியையும் அணியில் இடத்தையும் தக்கவைத்து 2021-ஐ கேப்டனாகத் தொடங்குவரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago