உடல் தகுதியில்தான் எனது முழு கவனமும் உள்ளது என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் புவனேஸ்வர் குமார் கூறினார். குடல் இறக்க பிரச்சினை காரணமாக அவதிப்பட்டு வருகிறார் புவனேஸ்வர் குமார். இதைத் தொடர்ந்து அவர் தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். காயம் காரணமாக இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான தொடரில் அவரது பெயர் இடம் பெறவில்லை.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
உலக டி20 கிரிக்கெட் போட்டி தொடங்க இன்னும் 9 மாதங்கள் உள்ளன. நான் அந்தப் போட்டியைப் பற்றி தற்போது சிந்திக்கவில்லை. இனி எனது முழு கவனமும் எனது உடல் தகுதியைப் பற்றித்தான் இருக்கும். நான் எப்போது குணமாவேன் என்பதற்கு காலக்கெடுவை விதிக்க முடியாது. எனக்கு குடலிறக்க பிரச்சினை இருப்பதை நான் முதலில் அறியவில்லை. தற்போது டாக்டர்கள் தெரிவித்த பின்னரே இந்த பிரச்சினையின் தீவிரம் புரிந்தது.
இன்னும் சில முறை மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற வேண்டியுள்ளது. இதற்கு அறுவை சிகிச்சை தேவைப்படுமா என்பது குறித்து அவர்கள்தான் கூற வேண்டும். காயம் காரணமாக போட்டிகளில் விளையாட முடியாமல் போவது மனவருத்தத்தை ஏற்படுத்துவது உண்மைதான். ஆனால் அதற்காக நான் உடைந்து போக மாட்டேன். மீண்டும் வலிமையுடன் நான் இந்திய அணிக்காக விளையாடுவேன்.
அணிக்குத் திரும்புவதற்காக முழு மூச்சுடன் பயிற்சிகளை எடுப்பேன். இதுவும் விளையாட்டில் ஓர் அங்கம்தான். தற்போது எனது குடும்பத்தாருடன் நான் நேரத்தை செலவிட்டு வருகிறேன். இந்தியாவுக்காக விளையாடும்போது குடும்பத்தாருடன் இருக்க முடியாது. இப்போது நேரம் கிடைத்துள்ளது. அதை நான் பயன்படுத்திக் கொண்டு வரு
கிறேன். அவர்களுக்காக சிறு சிறு வேலைகளை செய்து அவர்களை மகிழ்விக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
- பிடிஐ
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago