ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இதில் மகளிர் குத்துச்சண்டைக்கான தகுதி சுற்று அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சீனாவில் நடைபெறுகிறது. இந்த தகுதி சுற்றில் கலந்து கொள்ள உள்ள இந்திய வீராங்கனைகளை (51, 57, 60, 69, 75 கிலோ எடைப் பிரிவு) தேர்வு செய்வதற்கான ஆட்டங்கள் டெல்லியில் நேற்று தொடங்கியது.
இதில் 51 கிலோ எடைப் பிரிவில் 6 முறை உலக சாம்பியனான மேரி கோம் தனது முதல் ஆட்டத்தில் ரிது கிரேவாலை எளிதாக வீழ்த்தினார். அதேவேளையில் முன்னாள் ஜூனியர் உலக சாம்பியனான நிகாத் ஸரீன், தேசிய சாம்பியனான ஜோதி குலியாவை வீழ்த்தினார். இன்று நடைபெறும் இறுதி சுற்றில் மேரி கோம், நிகாத் ஸரீன் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற பாராட்டு விழா ஒன்றில் இந்திய குத்துச்சண்டை சங்க தலைவரான அஜய் சிங், எந்தவித தகுதி சுற்றுகளும் இல்லாமல் நேரடியாக டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றில் மேரி கோம் பங்கேற்பார் என வெளிப்படையாக அறிவித்தார். சர்வதேச போட்டிகளில் மேரிகோமின் தொடர்ச்சியான செயல்பாடுகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அஜய் சிங் தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த நிகாத் ஸரீன் வீராங்கனைகள் தேர்வை நியாயமான முறையில் நடத்த வேண்டும் எனவும் தனக்கும் மேரிகோமுக்கும் தகுதி சுற்று ஆட்டம் நடத்த வேண்டும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கும், இந்திய குத்துச்சண்டை சங்கத்துக்கும் கோரிக்கை வைத்தார். இதைத் தொடர்ந்து தனது முடிவை மாற்றிக் கொண்ட இந்திய குத்துச்சண்டை சங்கம் 51 கிலோ எடைப் பிரிவிலும் தகுதி சுற்று ஆட்டத்தை நடத்த முடிவு செய்தது. இதன் அடிப்படையிலேயே தற்போது தகுதி சுற்று நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேரி கோம் - நிகாத் ஸரீன் இடையில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறுபவரே சீனாவில் பிப்ரவரியில் நடைபெற உள்ள தகுதி சுற்றில் கலந்து கொள்ள தேர்வு செய்யபடுவார். இதனால் இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago