தென் ஆப்பிரிக்க வீரர் வெர்னான் பிலான்டர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

By பிடிஐ

தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் வெர்னான் பிலான்டர், வரும் இங்கிலாந்து தொடருக்குப் பின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக இன்று அறிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் குழுவான டேல் ஸ்டெயின், மோர்ன் மோர்கல், ஆகியோருடன் பிலான்டர் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

34 வயதான பிலான்டர் பெரும்பாலும் தென் ஆப்பிரிக்க அணிக்காக டெஸ்ட் போட்டிகளில்தான் அதிகமாக விளையாடியுள்ளார். இதுவரை 60 டெஸ்ட் போட்டிகளி்ல் விளையாடியுள்ள பிலான்டர் 216 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 13 முறை 5 விக்கெட்டுகளாகும்.

அதேபோல 30 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பிலான்டர் 41 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தனது ஓய்வு குறித்து வெர்மன் பிலான்டர் நிருபர்களிடம் கூறுகையில், "கடந்த 12 ஆண்டுகளாக என்னுடைய நாட்டுக்கு விளையாட வாய்ப்பு அளித்து ஆசிர்வதித்த என் தந்தைக்கு நன்றி தெரிவிக்கிறேன். என் நாட்டுக்காக விளையாடியதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். இந்தப் பயணத்தில் எனக்குத் துணையாக இருந்த மனைவி, நண்பர்கள், குழந்தைகள், குடும்பத்தார்கள் அனைவருக்கும் நன்றி. வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்குப் பின் நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன்" எனத் தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்க அணி ட்விட்டரில் கூறுகையில், " 2020-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் வேகப்பந்துவீச்சாளர் வெர்மன் பிலான்டர் தனது சிறந்த சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்" எனத் தெரிவித்துள்ளது.

டெஸ்ட் போட்டியில் சிறந்த பந்துவீச்சாளராக வலம் வந்த பிலான்டர், தனது முதல் 7 டெஸ்ட் போட்டிகளில் 51 விக்கெட்டுகளை வீழ்த்தி கடந்த 2012-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்க அணியின் சிறந்த வீரர் விருதைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்