ஐபிஎல் 2020 ஏலம்: வரலாறு படைத்த கம்மின்ஸ்; ஒவ்வொரு அணியிலும் வாங்கப்பட்ட வீரர்கள் யார்? முழுமையான பட்டியல்

கொல்கத்தாவில் நடந்த 13-வது சீசனுக்கான ஐபிஎல் டி20 போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் அதிகபட்சமாக பாட் கம்மின்ஸ் வாங்கப்பட்டுள்ளார். இது ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்சமான விலையாகும்.

கொல்கத்தாவில் 2020-ம் ஆண்டு ஐபிஎல் டி20 போட்டிக்கான வீரர்கள் ஏலம் நடந்தது. மொத்தம் 73 வீரர்களுக்கான இடத்தில் மொத்தம் 332 வீரர்கள் போட்டியிட்டனர். 8 அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்று வீரர்களைத் தேர்வு செய்தனர். இதில் 186 இந்திய வீரர்கள், 146 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

இதில் ஐபிஎல் வரலாற்றிலேயே மிக அதிகபட்சமாக ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் ரூ.15.50 கோடிக்கு விலைபோயுள்ளார். இதற்கு முன் அதிகபட்சமாக இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ரூ.14.5 கோடிக்குத்தான் விலைபோய் இருந்தார்.

உள்நாட்டு வீரர்கள் அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பியூஷ் சாவ்லா ரூ.6.75 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.

இதில் ஒவ்வொரு அணியும் வாங்கிய வீரர்கள், அவர்களின் விலை குறித்த முழுமையான விவரம்

சென்னை சூப்பர் கிங்ஸ்
பியூஷ் சாவ்லா(ரூ.6.75 கோடி), சாம் கரன்(ரூ.5.50 கோடி), ஜோஷ் ஹேசல்வுட் (ரூ.2 கோடி), ஆர் சாய் கிஷோர் (ரூ.20 லட்சம்).

டெல்லி கேபிடல்ஸ்

ஷிம்ரன் ஹெட்மயர்(ரூ.7.75 கோடி), மார்கஸ் ஸ்டோய்னிஸ் (ரூ.4.80 கோடி), அலெக்ஸ் காரே (ரூ2.40 கோடி), ஜேஸன் ராய் (ரூ.1.50 கோடி), கிறிஸ் வோக்ஸ் (ரூ.1.50 கோடி), மோரித் சர்மா.(ரூ.50 லட்சம்), துஷார் தேஷ்பாண்டே(ரூ.20 கோடி), லலித் யாதவ்.(ரூ.20 லட்சம்).

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

கிளென் மேக்ஸ்வெல் (ரூ.10.75 கோடி), ஷெல்டன் காட்ரெல்(ரூ.8.50 கோடி), ரவி பிஷ்னோய் (ரூ.2 கோடி), பிரமிஷ்மாரன் சிங் (ரூ.55 லட்சம்), தீபக் ஹூடா(ரூ.50 லட்சம்), ஜேம்ஷ் நீஷம்(ரூ.50 லட்சம்), இஷான் போரெல்(ரூ.20 லட்சம்), கிறிஸ் ஜோர்டன்(ரூ.75 லட்சம்), தஜிந்தர் தில்லன்(ரூ.20 லட்சம்).

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பாட் கம்மின்ஸ்(ரூ.15.50 கோடி), எயின் மோர்கன்(ரூ.5.25 கோடி), வருண் சக்கரவர்த்தி (ரூ.4 கோடி), டாம் பந்தன்(ரூ. ஒரு கோடி), ராகுல் திரிபாதி (ரூ.60 லட்சம்), பிரவிண் தாம்பே (ரூ.20 லட்சம்), எம். சித்தார்த்(ரூ. 20 லட்சம்), கிறிஸ் கிரீன் (ரூ.20 லட்சம்), நிகில் நாயக்(ரூ.20 லட்சம்).

மும்பை இந்தியன்ஸ்

நாதன் கோல்டர் நீல் (ரூ.8 கோடி), கிறிஸ் லின்(ரூ.2 கோடி), சவுரவ் திவாரி (ரூ.50 லட்சம்), மோஷின் கான்( ரூ.20 லட்சம்), திக்விஜய் தேஷ்முக் (ரூ.20 லட்சம்), பிரின்ஸ் பல்வந்த் ராய் சிங் (ரூ.20 லட்சம்).

ராஜஸ்தான் ராயல்ஸ்
ராபின் உத்தப்பா (ரூ.3 கோடி), ஜெயதேவ் உனத்கத் (ரூ.3 கோடி), யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (ரூ.2.4 கோடி), கார்த்திக் தியாகி (ரூ.1.3 கோடி), ஆன்ட்ரூ டை(ரூ.1 கோடி), டாம் கரன்(ரூ.1 கோடி), அனுஜ் ராவத்(ரூ.80 லட்சம்), டேவிட் மில்லர் (ரூ.75 லட்சம்), ஓஷ்னே தாமஸ் (ரூ.50 லட்சம்), ஆகாஷ் சிங் (ரூ.20 லட்சம்), அனிருத் ஜோஷி (ரூ.20 லட்சம்).

ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர்

கிறிஸ் மோரிஸ் (ரூ.10 கோடி), ஆரோன் பிஞ்ச் (ரூ.4.4 கோடி), டேல் ஸ்டெயின்(ரூ.2 கோடி), கான ரிச்சாட்ஸன்(ரூ.4 கோடி), இசுரு உதானா(ரூ.50 லட்சம்), ஜோசுவா பிலிப்(ரூ.20 லட்சம்), பவன் தேஷ்பாண்டே (ரூ.20 லட்சம்).

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
மிட்ஷெல் மார்ஷ்(ரூ.2 கோடி), பிரியம் கார்க்(ரூ.1.9 கோடி), விராட் சிங் (ரூ.1.9 கோடி), பேபியன் ஆலன்(ரூ.50 லட்சம்), சந்தீப் பவனகா(ரூ.20 லட்சம்), அப்துல் சமது(ரூ.20 லட்சம்), சஞ்சய் யாதவ்(ரூ.20 லட்சம்).

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE