சென்னை லீக்: ஏரோஸை சாய்த்தது ஐசிஎப்

By ஏ.வி.பெருமாள்

சென்னை லீக் சீனியர் டிவிசன் கால்பந்து போட்டியில் ஐசிஎப் அணி 4-2 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் ஏரோஸ் எப்சி அணியைத் தோற்கடித்தது. ஐசிஎப் ஸ்டிரைக்கர் பிரெடி 2 கோல்களை அடித்தார்.

இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஐசிஎப் அணி 20 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித் திருப்பதோடு, இந்த சீசனில் இதுவரை தோல்வியைச் சந்திக்காத ஒரே அணி என்ற பெருமையை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

ஐசிஎப் கோல் மழை

சென்னை நேரு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 6-வது நிமிடத்தில் ஏரோஸ் ஸ்டிரைக்கர் வைசாகன் இடதுபுறத்தில் இருந்து கோல் கம்பத்தை நோக்கி பந்தை ‘கிராஸ்’ செய்தார். கோல் கம்பத்தின் முன்னால் நின்ற ஐசிஎப் பின்கள வீரர் ததேவ்ஸ் பந்தை காலால் தடுக்க முயற்சித்தபோது, அவருடைய காலில் பட்ட பந்து கோல் கம்பத்துக்குள் செல்ல, அது ‘சேம் சைடு’ கோலானது.

இதன்பிறகு ஐசிஎப் அபாரமாக ஆட, ஏரோஸ் அணியின் பின்கள வீரர்களால் சமாளிக்க முடிய வில்லை.

ஐசிஎப் ‘லெப்ட் விங்கர்’ கார்த்திக் கொடுத்த ‘கிராஸை’ கோட்டைவிட்ட பிரெடி, அடுத்த சில நிமிடங்களில் (19-வது நிமிடம்) வலது புறத்தில் இருந்து பந்தை ‘கிராஸ்’ செய்ய, கோல் கம்பத்தின் அருகில் முன்னேறி வந்த கார்த்திக் தலையால் முட்டி கோலடித்தார்.

தொடர்ந்து பந்தை தன்வசம் வைத்திருந்த ஐசிஎப் ஒரு சில கோல் வாய்ப்புகளை பயன் படுத்திக் கொள்ளாத நிலையில், 19 மற்றும் 35-வது நிமிடங்களில் பிரெடி 2 கோல்களை அடிக்க, முதல் பாதி ஆட்டநேர 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது ஐசிஎப்.

ஏரோஸ் ஆதிக்கம்

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே (46-வது நிமிடம்) ஐசிஎப் அணிக்கு 4-வது கோலை அடித்தார் ஜெயக்குமார். ஐசிஎப் மேலும் சில கோல்களை அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அணி தடுப்பாட்டம் ஆடி ஆட்டத்தின் விறுவிறுப்பை குறைத்தது. அதேநேரத்தில் ஏரோஸ் சற்று வேகம் காட்ட, எஞ்சிய நேரம் முழுவதும் அந்த அணியின் வசமே பந்து இருந்தது. 52-வது நிமிடத்தில் ஏரோஸின் ஸ்டிரைக்கர் திமோத்தி கோலடித்தார்.

அந்த அணிக்கு கிடைத்த மற்றொரு கார்னர் கிக் வாய்ப்பில் செலஸ்டின் தலையால் முட்ட, ‘கோல் லைனில்’ இருந்த ஐசிஎப் பின்கள வீரர் நிர்மல் அற்புதமாகத் தகர்க்க, ஐசிஎப் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. பிரெடி முன்னேறி சென்று விளையாட முடியாமல் தடுமாறி னாலும் இரு கோல்களை அடித்த தோடு, ஒரு கோல் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்ததன் மூலம் ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

முன்னதாக நடைபெற்ற முதல் டிவிசன் லீக்கில் எஸ்பிஐ-மெட்ராஸ் யூத் பெஸ்டிவல் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்