2019-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐசிசி) ஒருநாள் மற்றும் டி20 ஆகிய இரு அணிகளிலும் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ளார்
ஐசிசி அறிவி்த்துள்ள ஒருநாள் போட்டிக்கான அணியில் ஸ்மிருதி மந்தனாவுடன் சேர்ந்து இந்திய வீராங்கனைகள் ஜுலன் கோஸ்வாமி, பூனம் யாதவ், ஷிகா பாண்டே ஆகியோரும் இடம் பெற்றள்ளனர். டி20 போட்டிக்கான அணியில் மந்தனாவுடன் சேர்ந்து ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா இடம் பெற்றுள்ளார்.
23 வயதாகும் ஸ்மிருதி மந்தனா இதுவரை 51 ஒருநாள் போட்டிகளிலும், 66 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதில் ஒருநாள் போட்டியில் 2,025 ரன்களும், டி20 போட்டியில் 1,451 ரன்களும் சேர்த்துள்ளார்.
2019-ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் எல்சி பெர்ரே தேர்வுசெய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு இந்திய வீராங்கனை மந்தனா தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆண்டில் பெர்ரே 441 ரன்கள் குவித்து 21 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
வளர்ந்துவரும் கிரிக்கெட் வீராங்கனையாகத் தாய்லாந்தின் சானிடா சுத்திராங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 26 வயதான வேகப்பந்துவீச்சாளர் சானிடா 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் மேக் லானிங் ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து லானிங் கூறுகையில், " ஐசிசியின் ஒருநாள் மற்றும் டி20 அணியில் என்னை கேப்டனாகத் தேர்வு செய்தது எனக்கு மிகப்பெரிய கவுரவம். என்னுடைய அணியில் மிகச்சிறப்பு வாய்ந்த வீராங்கனைகள் இருக்கிறார்கள். ஆஸ்திரேலிய அணிக்கு மிகச்சிறப்பு வாய்ந்த ஆண்டாக இருந்தது, 2020-ம் ஆண்டில் எதிர்வரும் சவால்களை எதிர்நோக்கி இருக்கிறோம் " எனத் தெரிவித்தார்
ஐசிசி ஒருநாள் போட்டிக்கான அணியில் இந்தியாவின் சார்பில் ஷிகா பாண்டே, ஜூலன் கோஸாமி, பூனம் யாதவ், ஸ்மிருதி மந்தனா ஆகியோரும், டி20 போட்டிக்கான அணியில் ஸ்மிருந்தி மந்தனா, தீப்தி சர்மா, ராதா யாதவ் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
50 mins ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago