உலக தடகள சாம்பியன்ஷிப்: 100 மீ. ஓட்டத்தில் பிரேசர் ஹாட்ரிக்

By ஏஎஃப்பி

15-வது உலக தடகள சாம்பியன் ஷிப் போட்டி சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வரு கிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் 100 மீ. ஓட்டத்தில் ஜமைக்க வீராங்கனையும், ஒலிம்பிக்கில் இருமுறை சாம்பியன் பட்டம் வென்றவருமான ஷெல்லி அன் பிரேசர் 10.76 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கம் வென்றார்.

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ந்து 3-வது முறையாக 100 மீ. ஓட்டத்தில் பிரேசர் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நெதர்லாந்தின் டாப்னே ஸ்கிப் பர்ஸ் 10.81 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கத்தையும், அமெரிக்காவின் டோரி போவி 10.86 விநாடிகளில் இலக்கை எட்டி வெண்கலத்தையும் தட்டிச் சென்றனர்.

ஆடவர் 3000 மீ. ஸ்டீபிள்சேஸ் போட்டியில் கென்யாவின் எஸெக்கியேல் கெம்போய் 8 நிமிடம் 11.28 விநாடிகளில் இலக்கை எட்டி தொடர்ந்து 4-வது முறையாக தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இவர் 2009-லிருந்து இதேபிரிவில் தங்கம் வென்று வருகிறார். கென்யாவின் கான்செலஸ் கிப்ருடோ (8:12.38) வெள்ளியும், பிரிமின் கிப்ராப் (8:12.54) வெண்கலமும் வென்ற னர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்