பெ.மாரிமுத்து
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 3 ஆட்டங் கள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத் தில் இன்று பிற்பகலில் நடைபெறு கிறது. இரு அணிகள் இடையே நடைபெற்ற டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற உற் சாகத்தில் விராட் கோலி தலை மையிலான இந்திய அணி ஒருநாள் போட்டித் தொடரை அணுகுகிறது.
டி 20 தொடரில் ரன் வேட்டை யாடிய ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி ஆகி யோரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக் கூடும்.
காயம் காரணமாக விலகிய ஷிகர் தவணுக்குப் பதிலாக மயங்க் அகர் வால் அணியில் சேர்க்கப்பட்டிருந் தாலும் விளையாடும் லெவனில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது அரிதுதான். ஏனெனில் கே.எல்.ராகுல் தற்போது சிறந்த பார்மில் உள்ளார்.
பேட்டிங் வரிசையில் 4-வது வீரருக்கான இடத்தை ஸ்ரேயஸ் ஐயர் தக்கவைத்துக் கொள்ளக் கூடும். வழக்கம் போல இந்தத் தொடரிலும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் கூடு தல் நெருக்கடியுடனே களமிறங் குகிறார். சேப்பாக்கம் ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணியில் பிரதான சுழற்பந்து வீச்சாளர்களாக குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் இடம் பெறக்கூடும்.
வேகப்பந்து வீச்சில் மொகமது ஷமியுடன் தீபக் சாஹர் புதிய பந்தை பகிர்ந்து கொள்ளக்கூடும். மீதம் உள்ள இரு இடங்களுக்கு ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ் ஆகியோர் இடையே போட்டி நிலவக்கூடும். இதில் ஷிவம் துபே, ஹைதராபாத்தில் நடைபெற்ற 2-வது டி 20 ஆட்டத்தில் அதிரடி யாக விளையாடி அரை சதம் அடித்திருந்தார். ஆல்ரவுண்டர் என்ற அடிப்படையில் அவர், அறிமுக வீரராக இடம் பெற வாய்ப்புகள் உள்ளது.
பொலார்டு தலைமையில் இளம் வீரர்கள் பலரை உள்ளடக்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி டி 20 தொடரில் பேட்டிங்கில் கவனத்தை ஈர்க்க தவறவில்லை. மும்பை ஆட்டத்தில் பீல்டிங்கின் போது காயம் அடைந்த எவின் லீவிஸ் இன்னும் அணியின் மருத் துவக்குழுவின் கண்காணிப்பி லேயே உள்ளதால் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவாரா? என்பது சந்தேகம் தான்.
டி 20 வடிவில் பேட்டிங்கில் தாக்குதல் ஆட்டம் தொடுக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணியானது ஒருநாள் போட்டிக்கு தகுந்தவாறு தங்களது ஆட்ட யுத்திகளை மாற்றிக் கொள்வது அவசியம். சிம்ரன் ஹெட்மையர், நிக்கோலஸ் பூரன், ஷாய் ஹோப், ராஸ்டன் சேஸ் ஆகியோர் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கக் கூடியவர்கள்.
பந்து வீச்சில் ஷெல்டன் காட்ரெல், ஜேசன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசப், ஹைடன் வால்ஷ் உள்ளிட்டோர் வலுவான இந்திய அணியின் பேட் டிங் வரிசையை கட்டுப்படுத்த வேண்டுமானால் தொடக்கத்தி லேயே விக்கெட்களை வீழ்த்துவது அவசியம்.
‘புவி’ இல்லை
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் (புவி) குடலிறக்கம் காரணமாக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்குர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
16 தொடர்கள் அம்பேல்
மேற்கிந்தியத் தீவுகள் அணி கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு பெரிய அணிகளுக்கு எதிராக இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர்களை வென்றதில்லை. இந்த காலக்கட்டத்தில் அந்த அணி 16 தொடர்களை இழந்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத் தில் சொந்த மண்ணில் இங்கி லாந்து அணிக்கு எதிரான தொடரை மேற்கிந்தியத் தீவு கள் அணி சமன் செய்திருந் தது. இது ஒன்று மட்டுமே தனி சிறப்பம்சமாக கருதப்பட்டது.
இருப்பினும் கடந்த மாதம் கத்துக்குட்டியான ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை 3-0 என மேற் கிந்தியத் தீவுகள் அணி வென்றிருந்தது. இது அந்த அணிக்கு சற்று நம்பிக் கையை கொடுத்துள்ளது.
நேருக்கு நேர்
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி களில் இதுவரை 130 முறை மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 62 ஆட்டங்களில் வெற்றியை பதிவு செய்துள்ளன. 2 ஆட்டங்கள் டை ஆனது. 4 ஆட்டங்களில் முடிவு கிடைக்கப்பெறவில்லை.
ஆடுகளம் எப்படி
சேப்பாக்கம் ஆடுகளம் எப்போதும் சுழற்பந்து வீச்சுக்கு அணுகூலமாகவே இருக்கும். இம்முறையும் அதற்கு விதிவிலக்கு இருக்க வாய்ப்பில்லை. சிறந்த சுழற்பந்து வீச்சை அணுகுவதற்கு மேற்கிந்தியத் தீவுகளின் பேட்ஸ்மேன்கள் பழக்கப்படாதவர்கள் என்பதால் அவர்களுக்கு எதிராக இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடும்.
சேப்பாக்கத்தில்....
சேப்பாக்கத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 1994-ல் நடைபெற்ற ஆட்டத்தில் 4 விக்கெட்கள் வித்தியாசத் திலும், 2007-ல் நடைபெற்ற ஆட்டத்தில் 3 விக்கெட்கள் வித்தியாசத்திலும், 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஆட்டத்தில் 80 ரன்கள் வித்தியாசத்திலும், இதே ஆண்டில் டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது.
யார் ஆதிக்கவாதி?
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதி ராக கடைசியாக மோதிய 9 இருதரப்பு தொடர்களையும் இந்திய அணி கைப் பற்றியுள்ளது. தற்போது 10-வது முறை யாக தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்குகிறது. 2006-ம் ஆண்டுக்கு பிறகு மேற்கிந்தியத் தீவுகளிடம் இருதரப்பு தொடர்களை இந்தியா இழந்ததில்லை என்பது கூடுதல் சிறம்பம்சம்.
நேரம்: பிற்பகல் 1.30
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago