பெர்த்தில் நடைபெறும் நியூஸிலாந்துக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 166 ரன்களுக்குச் சுருண்டது, பாலோ ஆன் கொடுக்கப்படவில்லை இதனையடுத்து தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி ஆட்ட முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்துள்ளது.
ஆட்ட முடிவில் மேத்யூ வேட் 8 ரன்களுடனும் கமின்ஸ் 1 ரன்னுடனும் களத்தில் நிற்கின்றனர், டிம் சவுதி 4 விக்கெட்டுகளையும், நீல் வாக்னர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். முன்னதாக ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 52 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
நேற்று நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சுக்கு (34), ஸ்லிப்பில் ஸ்டீவ் ஸ்மித் எடுத்த கேட்ச் பெரிதாகப் பேசப்படுகிறது, காரணம் ஸ்டார்க்கின் தீப்பொறி வேகத்தில் எட்ஜில் பட்டு பறந்த பந்து அது. 2வது ஸ்லிப்பில் ஸ்மித் கண்ணிமைக்கும் நேரத்தில் டைவ் அடித்து ஒரு கட்டத்தில் படுக்கைவசமாக காற்றில் பாய்ந்து கொண்டிருந்தார். ஸ்டன்னிங் கேட்ச் வகையைச் சேர்ந்தது.
இன்றைய முக்கிய விஷயம் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான கிரீன் டாப் பெர்த் பிட்சில் 2வது இன்னிங்சில் சவுதி மற்றும் நீல் வாக்னர் ஆகியோர் ஆஸி. பேட்ஸ்மென்களுக்கே கடும் எகிறு பந்துகளை வீசி ஆட்டம் காட்டினர். முன்னதாக மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
வார்னர், பர்ன்ஸ், லபுஷேன், ஸ்மித் ட்ராவிஸ் ஹெட் அனைவருமே ஷார்ட் பிட்ச் பந்துவீச்சு உத்திக்கு இரையாகினர். இதில் பர்ன்ஸ் 53 ரன்களையும், முதல் இன்னிங்ஸ் சாதனை சத நாயகன் லபுஷேன் 50 ரன்களையும் எடுத்து 2வது விக்கெட்டுக்காக 87 ரன்களைச் சேர்த்தனர். இது முக்கியக் கூட்டணியாக அமைந்தது.
வார்னருக்கு சவுதி வீசிய லெந்த் பந்தே சற்றே எதிர்பார்த்ததற்கு மேல் எழும்ப வார்னர் திணறினார், இதனால் மிட் ஆனில் புல்ஷாட்டில் கேட்ச் ஆகி வெளியேறினார், ஸ்மித் ஷார்ட் பிட்ச் எகிறு பந்தை ஆன் திசையில் புல்ஷாட்டில் கேட்ச் கொடுத்து 16 ரன்களில் வெளியேறினார். திமிங்கிலத்தை பொறி வைத்து பிடித்தார் வாக்னர்.
பர்ன்ஸுக்கு சவுதி 128 கிமீ வேகப்பந்து என்றாலும் ரவுண்ட் த விக்கெட்டில் வந்து எகிறு பந்தை வீசியதில் கிளவ்வில் பட்டு கல்லியில் கேட்ச் ஆனது. லபுஷேனுக்கும் வாக்னர் ஷார்ட் பிட்ச் எகிறு பந்தை வீச இவரது புல் ஷாட்டும் மிஸ்ஹிட் ஆகி கேட்ச் ஆனது. கடைசியில் கேப்டன் டிம் பெய்னுக்கு ரவுண்ட் த விக்கெட்டிலிருந்து உள்ளே கொண்டு வந்தார் சவுதி பந்து மட்டையைக் கடந்து மிடில் ஸ்டம்பைப் பதம் பார்த்தது, டிம் பெய்ன் டக். ஆஸ்திரேலியா 167/6.
முன்னதாக நியூஸிலாந்து அணி தன் முதல் இன்னிங்சை இன்று காலை 109/5 என்று தொடங்கியது, டெய்லர் 66, வாட்லிங் 0-வில் இருந்தனர். வாட்லிங் 8 ரன்களில் இருந்த போது கமின்ஸ் வீசிய மணிக்கு 142 கிமீ வேகப்பந்து லெந்த்திலிருந்தே கொஞ்சம் கூட எழும்ப வாட்லிங் மட்டையை தாமதமாகக் கொண்டு வர மட்டையில் பட்டு பந்து ஸ்டம்பில் பதம் பார்த்தது.
ராஸ் டெய்லர் போராடி எடுத்த 80 ரன்களுக்குப் பிறகு நேதன் லயன் இந்த கிரீன் டாப் பிட்சில் எவ்வளவு அதிகமாக பந்தை ஸ்பின் செய்து திருப்புகிறார் என்று அதிர்ச்சியடைந்தார். ஆம் ஒரு பந்து வெளியில் பிட்ச் ஆகி நிறைய திரும்பி பேட் கால்காப்பு வழியாகச் சென்றது ஆனால் அவுட் ஆகவில்லை. அந்தப் பந்தைப் பார்த்து பயந்த டெய்லர், அதன்பிறகு நேதன் லயனை நம்பிக்கையுடன் ஆடவில்லை. அப்படிப்பட்ட போதிய திருப்பம் உள்ள ஒரு பந்தில் எட்ஜ் ஆகி ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து 80 ரன்களில் வெளியேறினார். இதில் 9 பவுண்டரிகள்.
ராஸ் டெய்லருடன் சேர்த்து கடைசி 4 விக்கெட்டுகள் 19 ரன்களில் வெளியேற நியூஸிலாந்து 166 ரன்களுக்குச் சுருண்டது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 mins ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago