ஆல்-ரவுண்டருக்கான தகுதிகள் ஷிவம் துபேவிடம் உள்ளது இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கருத்து

By செய்திப்பிரிவு

ஆல்-ரவுண்டராக வருவதற்கான அத்தனை தகுதிகளும் இந்தி்ய கிரிக்கெட் அணி வீரர் ஷிவம் துபேவுக்கு உள்ளன என்று இந்திய பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் நம்பிக்கை தெரிவித்தார். இதுகுறித்து சென்னையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

சர்வதேச அளவிலான போட்டிகளில் அவரது செயல்பாடு சிறந்ததாக உள்ளது. அவர் விளையாடும் ஒவ்வொரு சர்வதேச போட்டியிலும் அவர் அபாரமாக விளையாடுகிறார். இதனால் ஒவ்வொரு போட்டியின்போதும் அவருக்குள்ள நம்பிக்கை அதிகரித்து வருகிறது.

மும்பையில் நடைபெற்ற போட்டியின்போது அவர் சிறந்த முறையில் பந்து வீசினார். அவர்மீது நம்பிக்கை வைத்த கேப்டன் விராட் கோலி, அவருக்கு கூடுதல் ஓவர்களை வழங்கினார். அவரிடம் அபாரமான திறமை இருக்கிறது என நினைக்கிறேன். ஆல்-ரவுண்டராக வருவதற்கான அத்தனை தகுதிகளும் அவருக்கு உள்ளன.

சர்வதேச அளவில்

அதைப் போலவே தீபக் சாஹரும் சிறப்பாக பந்துவீசி வருகிறார். கடந்த சில டி20 போட்டிகளில் அவர் திறமையான முறையில் பந்துவீசினார். அவரின் திறமையை ஐபிஎல் போட்டிகளின் போதே நான் பார்த்தேன். பந்தை இரு பக்கங்களிலும் நகர்த்துவதில் வல்லவராக இருக்கிறார். ஸ்லோ பவுன்சர்கள், யார்க்கர்களை அபாரமாக வீசுகிறார்.

அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கலாம். இதன்மூலம் அவர் சர்வதேச அளவில் மிளிர்வார். அணி சமமான அளவில் பலம்பொருந்தியதாக இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறோம். எனவே சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவை, ஆல்-ரவுண்டராக பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

இது எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். சென்னை மைதானத்தில் பனிப்பொழிவு பற்றியகவலை வேண்டாம். புவனேஸ்வர் குமார் உடல்தகுதி குறித்து, டாக்டர்கள் ஆலோசித்து வருகின்றனர். அதன் பிறகே அவர் விளையாடுவாரா இல்லையா என்பதைச் சொல்ல முடியும்.

வாஷிங்டன் சுந்தர்

வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கும் போதெல்லாம் அவர் சிறப்பாக பந்து வீசியிருக்கிறார். அதேபோல பேட்டிங்கும் அவருக்கு சிறப்பாக வருகிறது. அவருக்கு வாய்ப்பு தரும்போது அதிரடியாக விளையாடி ரன்களைக் குவிப்பதில் வல்லவர். எதிர்காலத்தில் ஒரு நாள் போட்டிகளுக்கு அவர் தேர்வு செய்யப்படுவார் என நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்