கொல்கத்தாவில் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள ஐபிஎல் 2020 ஏலத்தில் 14 வயது சுழற்பந்துவீச்சாளர் அறிமுகமாக உள்ளார். இவரை எந்த அணி விலைக்கு வாங்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நூர் அகமது லகன்வால் என்ற 14 வயது வீரர்தான் இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் இடம்பெற்றுள்ளார். நூர் அகமதுவுக்கு 14வயது 344 நாட்கள் ஆவதால், ஐபிஎல் போட்டி ஏலத்தில் இடம் பெற்ற வயதுகுறைந்த வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
மணிக்கட்டில் சுழற்றி பந்துவீச்சும் திறமை படைத்த நூர் அகமது ஆப்கானிஸ்தான் அணியின் 19வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம் பெற்றவர். ஆசியக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பெற்று 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சமீபத்தில் லக்னோவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான ஒருநாள் தொடரில் நூர் அகமது சிறப்பாகப் பந்துவீசினார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-2 என்ற கணக்கில் இந்திய அணிதொடரை வென்றாலும், இந்த தொடரில் நூர் அகமது 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்
ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் மாநிலத்தைச் சேர்ந்தவரான நூர் முகமதுவை அந்நாட்டு அணியின் முன்னாள் கேப்டனும், தேர்வுக்குழுத் தலைவருமான ராயிஸ் அகமதுஜாய் கண்டுபிடித்து அணிக்குள் கொண்டு வந்தார்
இதுகுறித்து அகமதுஜாய் ஸ்போர்ட்ஸ்டார் நிருபரிடம் கூறுகையில், " 19 வயதுக்குட்பட்டோருக்கான வீரர்கள் தேர்வில்தான் நூர் முகமதுவை கண்டேன். சிறப்பாகப் பந்துவீசியதால் அவரைத் தேர்வு செய்து அணிக்குள் கொண்டுவந்தேன். நிச்சயம் எதிர்காலத்தில் சிறந்த பந்துவீச்சாளராக நூர் அகமது வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவரின் பந்துவீச்சு நிச்சயம் வலது கை பேட்ஸ்மேனுக்கு சவாலாக இருக்கும். அவருக்கு ஐபிஎல் ஒப்பந்தம் கிடைத்தால் நிச்சயம் எதி்ர்காலம் சிறப்பாக மாறும். எங்கள் அணியும் வலிமையாக மாறும்" எனத் தெரிவித்தார்
நூர் முகமதுவின் திறமையை கேள்விப்பட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை அழைத்து பந்துவீசக் கூறி ஆய்வு செய்துள்ளது.ஆதலால், இந்தமுறை ராஜஸ்தான் அணி நூர் அகமதுவை ஏலத்தில் எடுக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
நூர் அகமது தவிர்த்து, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முகமது ஷாஷாத், ஜாகீர் கான், கரீம் ஜனத், வக்கர் சலம்கேல், குவயிஸ் அகமது, நவின் உல் ஹக் ஆகியோரும் ஐபிஎல் ஏலத்தில் இடம் பெற்றுள்ளனர்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago