ஸ்ட்ரெஸ் பிராக்சர் காரணமாக இந்தியாவில் தன் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியை தெ.ஆ.வுக்கு எதிராக ஆடவிருந்த பும்ரா ஆட முடியாமல் போனது, ஆனால் தற்போது அவர் குணமாகி விட்டதாகக் கூறும் இந்திய அணி நிர்வாகத் தகவல் ஒன்று மே.இ.தீவுகளுக்கு எதிரான 2வது விசாகப்பட்டிண ஒருநாள் போட்டிக்கு முன்பாக வலைப்பயிற்சியில் பந்து வீசவுள்ளார் என்று தெரிவிக்கிறது.
“பும்ரா இந்திய அணியுடன் வலைப்பயிற்சியில் பயிற்சி மேற்கொள்வார், அப்போது அவர் பந்து வீசுவார். இப்போது இதுதான் நடைமுறை. பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக புவனேஷ்வர் குமார் உடல்தகுதியும் இவ்வாறுதான் சரிபார்க்கப்பட்டது. ஆனால் அவர் அணியில் இல்லை என்பது வேறு விஷயம். அதே போல்தான் பும்ரா இந்திய வீரர்களுக்கு வீசி தன் உடல் தகுதியை வலைப்பயிற்சியில் பீல்டிங் உள்ளிட்டவை செய்து நிரூபிக்க வேண்டும் இதுதான் இப்போதைய நடைமுறை” என்று பிடிஐ ஏஜென்சியிடம் பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
அதாவது இந்திய வீரர்கள் வலையில் பயிற்சி செய்யும் போது பும்ராவும் பந்துவீசுவார் அவரை உடற்கோப்பு பயிற்சியாளர் நிதின் படேல், பயிற்றுனர் நிக் வெப் ஆகியோர் பரிசோதித்த பிறகே அவர் தேர்வுக்குத் தயார் என்று கருதப்படுவார்.
ஆனாலும் நியூஸிலாந்து தொடருக்குத்தான் பும்ரா தேர்வுக்குப் பரிசீலிக்கப்படுவார் என்று தெரிகிறது.
டிசம்பர் 18ம் தேதி விசாகப்பட்டிணத்தில் இந்திய-மே.இ.தீவுகள் நடைபெறவுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago