வதோதராவில் நடந்துவரும் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பை அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா அதிரடியாக ஆடி இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.
ஊக்கமருந்து பரிசோதனையில் சிக்கி ஒரு ஆண்டுக்கும்மேலாக தடையில் இருந்த இளம்வீரர் பிரித்வி ஷா மீண்டும் முதல் தரப் போட்டிக்கு திரும்பி வந்து இரட்டை சதம் அடித்துள்ளார்.
பரோடா அணிக்கு 534 ரன்கள் வெற்றி இலக்காக மும்பை அணி நிர்ணயித்துள்ளது. 3 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் சேர்த்துள்ள பரோடா அணி, இன்னும் வெற்றிக்கு 460 ரன்கள் தேவை. நாளை ஒருநாள் மட்டுமே இருக்கும் நிலையில், பரோடா அணி தோல்வியைத் தவிர்க்க கடுமையாக போராடி வருகிறது.
முதல் இன்னிங்ஸில் 66 ரன்கள் சேர்த்த பிரித்வி ஷா, 2-வது இன்னிங்ஸில் 179 பந்துகளில 202 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 7 சிக்ஸர்கள் 19 பவுண்டரிகள் அடங்கும். 84 பந்துகளில் சதம் அடித்த பிரித்வி ஷா அடுத்த 90 பந்துகளில் சதம் அடித்து இரட்டை சதத்தை நிறைவு செய்தார்.
முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 431 ரன்களுக்கும், பரோடா அணி 307 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. பரோடா அணியில் தேவ்தார் அதிகபட்சமாக 160 ரன்கள் சேர்த்தார். மும்பை அணியில் முலானி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
124 ரன்கள் முன்னிலையுடன் மும்பை அணி 2-வது இன்னிங்ஸை விளையாடத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய் பஸ்டா, பிரித்வி ஷா அருமையான அடித்தளத்தை அமைத்துக்ககொடுத்தார்கள். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 190 ரன்கள் சேர்த்தனர்.
பிஸ்டா 68 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஜனே 2 ரன்னிலும், ரஹானே 9 ரன்னிலும் வெளியேறினர். 4-வது விக்கெட்டுக்கு பிரித்வி ஷாவுடன், கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அதிரடியாக பேட்டிங் செய்த பிரித்வி ஷா இரட்டை சதம் அடித்து 202 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் சூர்ய குமார் யாதவ் 102 ரன்களிலும், தாரே 19 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தபோது டிக்ளேர் செய்தனர்.
இதையடுத்து 534 ரன்கள் இலக்குடன் பரோடா அணி களமிறங்கியது. 4-வது நாளான இன்று பரோடா அணி விரைவாக 3 விக்கெட்டுகளை 74 ரன்களுக்குள் இழந்தது. ராஜ்புத் 16 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago