நியூஸிலாந்து வீரர்களை வீழ்த்தும் விதம் குறித்து தயாரித்த உத்திகள் அடங்கிய குறிப்பு டேல் ஸ்டெய்ன் தங்கியிருந்த அறைக்கு அனுப்புவதற்கு பதிலாக பெண் ஒருவர் தங்கியிருந்த அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது.
இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் வெளியான செய்தியின் விவரம் வருமாறு:
இன்று தென் ஆப்பிரிக்கா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அனைத்து நியூஸிலாந்து பேட்ஸ்மென்களுக்கும் எப்படி பந்து வீசினால் வீழ்த்தலாம் என்ற திட்ட வரைவு நேற்று தயாரிக்கப்பட்டது. இது வீரர்கள் தங்கியிருக்கும் அறைக்கதவு வழியாக உள்ளே நழுவவிடப்பட்டது. இதில் டேல் ஸ்டெய்னுக்கு சென்று சேர வேண்டிய நகல் வேறொரு அறையில் தங்கியிருந்த பெண் அறையில் நழுவ விடப்பட்டதால் அந்தப் பெண் குழப்பமடைந்தார்.
அந்தத் திட்ட வரைவில், மார்டின் கப்திலுக்கு 4-வது ஸ்டம்ப் லைனில் வீசி பந்தை உள்ளே கொண்டு வந்து எல்.பி. பவுல்டு செய்யலாம் என்றும் கட் ஷாட்டில்
ஸ்கொயர் லெக்கில் பிடித்துப் போடலாம் என்றும் உள்ளே வரும் பவுன்சரில் கப்தில் வீழ்ந்து விடுவார் என்றும், கடைசி ஓவர்களில் கப்தில் நின்றால் அவரது உடலுக்கு பவுன்சர்களையும், இன்ஸ்விங் யார்க்கரையும் வீச வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே போல் கேப்டன் வில்லியம்சனுக்கு 4-வது ஸ்டம்பில் டிரைவ் ஆடுவது போல் வீசினால் அவர் கேட்ச் கொடுப்பார் என்றும் பவுன்சர் வீசினால் அடிப்பார் ஆனால் புல்ஷாட் சரியாக ஆடமாட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிராண்ட் எலியட்டுக்கு ‘அப்பட் கட்’ ஆடுவார் அதனால் ஜாக்கிரதை என்றும், 4வது ஸ்டம்புக்கு வீசி உள்ளேயும், வெளியேயும் பந்தை கொண்டு செல்ல வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கொலின் மன்ரோவுக்கு ரவுண்ட் த விக்கெட்டில் ஸ்டம்புகளுக்கு நேராக வீச வேண்டும் என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது. விலாவுக்கு பவுன்சர் வீசினால் இவர் நன்றாக ஆடமாட்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த குறிப்புகள் தன் அறைக்கு அனுப்பப்பட்டது குறித்து அதன் நகலை பேஸ்புக்கில் அந்தப் பெண் வெளியிட்டிருந்தார்.
2000-ம் ஆண்டு ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜான் புகானன் நியூஸிலாந்து அணிக்கு எதிரான உத்திகளைக் குறிப்புகளாக்கி வீரர்கள் அறைக்கு அனுப்பும் போதும் குளறுபடி ஏற்பட்டது.
அதே போல் 2001-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனல்டுக்கு எதிரான பேட்டிங் உத்திக் குறிப்பு அடங்கிய சீட்டு ரிக்கி பாண்டிங் அறையில் நுழைக்கப்படுவதற்கு பதிலாக பத்திரிகையாளர் ஒருவர் தங்கியிருந்த அறைக்குள் நுழைக்கப்பட்டது.
2012-ம் ஆண்டும் பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான உத்திகள் அடங்கிய குறிப்புகள் கூரியர் மெயில் செய்தித்தாள் கையில் தகவறுதலாகக் கிடைத்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago