பிபாவின் கோல்டன் பால் விருது: 6-வது முறையாக வென்றார் மெஸ்ஸி

By செய்திப்பிரிவு

பலான் டோர் (கோல்டன் பால்) விருதை அர்ஜென்டினாவின் லயோனால் மெஸ்ஸி 6-வது முறையாக வென்றார்.

பிபா சார்பில் ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரர், வீராங்கனைகளுக்கான ‘பலான் டோர்’ (கோல்டன் பால்) விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள தியேட்டர் டு சாட் லெட் அரங்கில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

இதில் அர்ஜென்டினா மற்றும் பார்சிலோனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி ‘பலான் டோர்’ விருதை தட்டிச் சென்றார். விருதுக்கான வாக்குப் பதிவில் மெஸ்ஸிக்கும் நெதர்லாந்து மற்றும் லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரரான விர்ஜில் வான் டிஜிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

எனினும் விர்ஜில் வான் டிஜிக்கை பின்னுக்குதள்ளி 6-வது முறையாக விருதை தட்டிச் சென் றார் 32 வயதான லயோனல் மெஸ்ஸி. 4 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விருதை கைகளில் ஏந்தி யுள்ளார் மெஸ்ஸி. 2015, 2012, 2011, 2010, 2009 ஆகிய ஆண்டுகளிலும் சிறந்த வீரருக்கான விருதை கைப்பற்றியிருந்தார் மெஸ்ஸி.

இந்த ஆண்டில் அர்ஜென்டினா மற்றும் பார்சிலோனோ அணிக்காக 54 ஆட்டங்களில் விளையாடிய மெஸ்ஸி 46 கோல்களை அடித் திருந்தார். 17 கோல்களை அடிக்க உதவினார். ஜூவென்டஸ் மற்றும் போர்ச்சுக்கல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால் டோ விருது தேர்வுக்கான வாக்குப் பதிவில் 3-வது இடம் பெற்றார்.

கால்பந்து பத்திரிகையாளர் களால் தேர்வு செய்யப்படும் இந்த விருதை மெஸ்ஸியும், ரொனால் டோவும் கடந்த 12 ஆண்டுகளில் 11 முறை வென்றிருந்தனர். 2018-ம் ஆண்டு மட்டுமே இவர்கள் இரு வரும் இந்த விருதை தவறவிட் டிருந்தனர். அந்த ஆண்டில் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அசத்திய குரோஷியாவின் லூக்கா மோட்ரிச் விருதை தட்டிச் சென்றி ருந்தார்.

அதேவேளையில் மகளிர் பிரி வில் சிறந்த வீராங்கனைக்கான விருதை அமெரிக்காவின் மேகன் ரபினோ பெற்றார். கடந்த ஜூலை மாதம் பிரான்ஸில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மேகன் ரபினோ தலைமையிலான அமெரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்று இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்