முதல் டெஸ்ட்: ஷிகர் தவண், விருத்திமான் சஹா நழுவவிட்ட கேட்ச்கள்

By இரா.முத்துக்குமார்

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஸ்லிப் பீல்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றே கூற வேண்டும்.

ஆனால் மட்டைக்கு அருகில் முன்புறம் அருமையான பீல்டிங் திறனை லோகேஷ் ராகுலும் சற்று முன் மேத்யூஸை வீழ்த்திய ரோஹித் சர்மாவின் கேட்சும் வெளிப்படுத்தினாலும்.ஸ்டம்புக்குப் பின்புறம் அணியின் கேட்சிங்கில் இன்னமும் முன்னேற்றம் தேவை என்ற நிலையே உள்ளது.

இன்று காலை வருண் ஆரோனும், இசாந்த் சர்மாவும் அற்புதமாக வீசினர், குறிப்பாக இசாந்த் சர்மா, 138-140 கிமீ வேகம் வரை இருவரும் வீசினாலும் இசாந்த்தின் அளவு மற்றும் திசை அபாரமாக அமைந்தது. ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே குட் லெந்த்தில் பிட்ச் செய்து பந்தை வெளியே கொண்டு சென்ற விதம் இலங்கை பேட்ஸ்மென்களின் கால் நகர்த்தல்களை கடும் சந்தேகத்துக்குரியதாக்கியது.

இந்நிலையில் குஷல் சில்வா என்ற தொடக்க வீரருக்கு ஆட்டத்தின் தொடக்கத்திலேயே முதல் ஸ்லிப்பில் கேட்ச் ஒன்றை கோட்டை விட்டார். நல்ல வேகத்தில் ஆஃப் ஸ்டம்பில் ஒரு பந்து எகிற அதனை குஷல் சில்வா கட் ஆட முயன்றார், எட்ஜ் நேராக, எளிதாக ஷிகர் தவணிடம் சென்றது. அவர் அதனை நழுவ விட்டார், ஒரு நேரடியான எளிதான கேட்ச் நழுவவிடப்பட்டது. அடுத்ததாக அவர் ஆட்டமிழந்தாலும், அது அதிர்ஷ்டமே. பந்து அவரது ஆர்ம் கார்டில் பட்டுச் சென்றதற்கு அவுட் கொடுக்கப்பட்டது. இவர் பாகிஸ்தானுக்கு எதிராக நன்றாக விளையாடினார்.

உணவு இடைவேளையின் போது 65/5 என்று இலங்கை தடுமாறிக் கொண்டிருந்தது. சந்திமால், மேத்யூஸ் களத்தில் இருந்தனர், இந்நிலையில் உணவு இடைவேளைக்குப் பிறகு, ஆட்டத்தின் 25-வது ஓவரில் சந்திமாலுக்கு இசாந்த் சர்மா ஓவரை வீச, 2-வது பந்து சந்திமாலை ஆட இழுத்தது, ஆடினார் பந்து மட்டையின் விளிம்பில் பட்டு சஹாவுக்கு வாகாகச் சென்றது, ஆனால் கேட்சை தட்டி விட்டார் சஹா. ஒரு வாய்ப்பு நழுவ விடபப்ட்டது.

அதே சந்திமால் தற்போது அதிரடியாக ஆடி 68 பந்துகளில் 55 ரன்களுடன் ஆடி வருகிறார். மேத்யூஸ் (64), பிரசாத் (0) ஆகியோரை அஸ்வின் வீழ்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இலங்கை அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்துள்ளது. சந்திமாலுடன் ரங்கனா ஹெராத் இருக்கிறார்.

ஸ்லிப் பீல்டிங் தோனி கேப்டன்சியின் போதே பலவீனமடைந்தது. காரணம் வேகப்பந்து வீச்சாளர்கள் மீது அவருக்கு நம்பிககையில்லாமல் இருந்தது. முதல் ஒரு மணிநேரத்திலேயே அயல்நாட்டு பிட்சாக இருந்தாலும் 2 ஸ்லிப், ஒரு ஸ்லிப் என்று பின்னடைந்து விடுவார் தோனி, பிறகு துணைக் கண்ட பிட்ச்களாக இருந்தால், அதுவும் 2-வது இன்னிங்ஸாக இருந்தால் தொடக்கத்திலேயே அஸ்வினிடம் பந்தைக் கொடுப்பார். அயல்நாட்டில் உணவு இடைவேளை முடிந்து ஒரு முனையில் ஒரு ஸ்லிப்புடன் வேகப்பந்து வீச்சையும் இன்னொரு முனையில் லாலிபாப் பவுலர் ரெய்னாவையும் அழைத்து வீசச் செய்வார் தோனி.

இதனால் ஸ்லிப் பீல்டிங்கின் தரம் கீழிறங்கி விட்டது. இதனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவும் தனது கிரிக் இன்போ கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ரஞ்சி போட்டிகளில் விளையாடிய அனுபவமற்ற தோனி, ஸ்லிப்பை நிறுத்தும் இடமும் தவறாகவே அமைந்திருந்ததாக ஆகாஷ் சோப்ரா குறிப்பிட்டார். ஒன்று ஒரு ஸ்லிப்புக்கும் இன்னொரு ஸ்லிப்புக்கும் இடையே அதிக இடைவேளி இருக்கும் அல்லது அதிக நெருக்கமாக நிறுத்தப்படுவர்.

குறிப்பாக திராவிட், லஷ்மண் போன பிறகு ஸ்லிப் திசை பீல்டிங் படுமோசமானதற்கு போதிய பயிற்சியின்மையும் கேப்டன் தோனியின் களவியூக அனுபவமின்மையுமே காரணமாகும் என்று நிபுணர்கள் பலர் ஏற்கெனவே கருத்து தெரிவித்திருப்பது இந்திய அணி இந்தத் துறையில் இன்னமும் முன்னேற்றமடையவேண்டும் என்பதையே உணர்த்துகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்