மரியாதையே இல்லை; நான் எந்த அணிக்கும் சுமைதான்: டி20 அணியில் இருந்து வெளியேறிய கிறிஸ் கெயில் வேதனை

By ஐஏஎன்எஸ்

நான் எந்த அணிக்குப் போனாலும் மரியாதை இல்லை. நான் என்ன செய்தேன் என்று யாரும் பார்ப்பதில்லை. என்ன செய்யவில்லை என்றுதான் பார்க்கிறார்கள். நான் எந்த அணிக்கும் சுமைதான் என்று மே.இ.தீவுகள் நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில் உருக்கமாகத் தெரிவித்தார்.

மே.இ.தீவுகள் அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயில். கிறிஸ் கெயில் என்பதைக் காட்டிலும் கெயில் புயல் என்று அழைப்பதுதான் உத்தமம். களத்தில் இறங்கி அடிக்கத் தொடங்கிவிட்டால் கெயில் அதிரடி முன் எந்த பந்துவீச்சாளர்களும் நிலைக்க முடியாது. ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்துள்ள பெருமை, டி20 போட்டியில் சதம் அடித்துள்ள பெருமை போன்றவற்றை கெயில் தக்க வைத்துள்ளார்.

மே.இ.தீவுகள் அணிக்கு மட்டுமல்லாது உலகில் பல்வேறு நாடுகளில் நடக்கும் டி20 லீக் போட்டிகளில் கெயில் விளையாடி வருகிறார். இந்தியாவில் ஐபிஎல், ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக், வங்கதேசம் லீக், கரீபியன் லீக், பாகிஸ்தான் லீக் என அனைத்திலும் கெயில் விளையாடி வருகிறார். இதுவரை உலகம் முழுவதும் 13 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கெயில் 13,152 ரன்கள் குவித்துள்ளார்.

தற்போது தென் ஆப்பிரிக்காவில் எஸ்எஸ்எல் டி20 லீக்கில் ஜோஸி ஸ்டார்ஸ் அணியில் கெயில் விளையாடினார். இதில் 6 இன்னிங்ஸ் சேர்த்து 101 ரன்கள் சேர்த்தார். அந்த அணியும் சூப்பர் லீக்கிற்குள் செல்ல முடியவில்லை. இதனால், அந்த அணியில் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு கெயில் வெளியேறினார்.

தன்னுடைய அதிருப்தியை கிறிஸ் கெயில் கிரிக் இன்போ தளத்துக்குப் பேட்டி மூலம் வெளிப்படுத்தினார்.

அவர் கூறியதாவது:

''என்னைப் பொறுத்தவரைக்கும் நான் ஏதாவது ஒன்று அல்லது 3 போட்டிகளில் சரியாக விளையாடாமல் ரன் அடிக்க முடியாமல் போனால், நான் அணிக்குப் பாரமாகிவிடுகிறேன். நான் தென் ஆப்பிரிக்காவில் நடந்த எம்எஸ்எல் டி20 அணியை மட்டும் குறிப்பிடவில்லை.

நானும் உலகில் பல்வேறு நாடுகளில் பல டி20 லீக்கில் பல அணிகளில் விளையாடி இருக்கிறேன். எனக்கு இதே நிலைதான். பல ஆண்டுகளாக இதை நான் ஆய்வு செய்துவிட்டேன். நான் 3 முறைக்கு மேல் களமிறங்கி ரன் அடிக்காவிட்டால் கிறிஸ் கெயிலை அந்த நிர்வாகத்தினர் ஒரு பாரமாகவே, வீண் சுமையாகவே பார்க்கிறார்கள்.

ஒரு தனி நபர், தனி வீரர் விளையாடாமல் போவது, சிறப்பாகச் செயல்படாமல் போவது அணிக்குச் சுமையாகிவிடுகிறது. அதன்பின் எனக்கு அணியில் மதிப்பு இல்லாமல் போய்விடும். மரியாதைக் குறைவாக நடத்துவார்கள். அணிக்காக நீங்கள் என்ன செய்தீர்கள் என்று யாரும் நினைவில் வைத்துக் கொள்ளமாட்டார்கள். ஆதலால் மரியாதை இருக்காது எனக்கும் மரியாதை இல்லை.
நான் இந்த அணியின் நிர்வாகத்தை மட்டும் குறிப்பிடவில்லை. பொதுவாக அணியின் நிர்வாகத்தைப் பற்றிப் பேசுகிறேன். வீரர்கள், மேலாண்மை நிர்வாகம், அணியின் தலைமை நிர்வாகம், உறுப்பினர்கள் அனைவரும் இப்படித்தான் நடக்கிறார்கள். கெயிலுக்கு எங்கும் மரியாதை கிடைத்தது இல்லை.

ஏதாவது ஒரு இடத்தில் நான் சரியாக விளையாடாமல் போனால், அத்தோடு என் வாழ்க்கை முடிந்துவிடும். கெயில் சரியாக விளையாடவில்லை, அவர் மோசமான பேட்ஸ்மேன், மற்ற அனைத்து விஷயங்களிலும் மோசமானவர் என்று என்னைப் பழிப்பார்கள். இதுபோன்ற விஷயங்களை நான் பொதுவாகக் கடந்து வந்துவிடுவேன். இதை எதிர்பார்த்துதான், இதோடு சேர்ந்துதான் வாழ்ந்து வருகிறேன்’’.

இவ்வாறு கிறிஸ் கெயில் தெரிவித்தார்.

எம்எஸ்எல் டி20 லீக்கில் கிறிஸ்கெயில் விளையாடிய ஜோஸி ஸ்டார்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி ஜோனோ லீவ் ரைட் கூறுகையில், "நிச்சயமாக நாங்கள் கிறிஸ் கெயிலைச் சுமையாக நினைக்கவில்லை. அவர் மிகவும் உணர்வுமிக்க வீரர். கெயில் தான் சரியாக விளையாடவில்லை என்று வருத்தப்படுகிறார். பொதுவாக அணி நிர்வாகத்துக்கும், ரசிகர்களுக்கும் கெயில் மீது எதிர்பார்ப்பு இருக்கும். அவர் விளையாடாதபோது அணிக்கும் ஏமாற்றம் இருக்கும்.

கிறிஸ் கெயிலை நன்றாக அறிவேன். அதிக திறமை உடையவர். துரதிர்ஷ்டவசமாக அவரால் விளையாட முடியவில்லை. நிச்சயமாக அவர் அணிக்குச் சுமையில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்