சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்ட டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை தொட்டுவிடும் தொலைவில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளார்.
பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் 4 வீரர்கள் இடம் பெற்றுள்ளார்கள்.
வங்கதேசத்துக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் ஆஸி. வீரர் ஸ்மித்துக்கும் இருந்த 25 புள்ளிகள் இடைவெளியே 3 புள்ளிகளாக விராட் கோலி குறைத்துள்ளார். தற்போது கோலி 928 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஸ்மித் 931 புள்ளிகளுடன் முதலிடத்திலும் உள்ளனர்.
வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த மயங்க் அகர்வால் 700 புள்ளிகளுடன் டாப் 10 வரிசையில் 10-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இவர் தவிர சட்டேஸ்வர் புஜாரா 791 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், ரஹானே 759 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.
இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட்ப போட்டியில் 91, 28 ரன்கள் சேர்த்ததன் மூலம் டாப் 10 வரிசையில் முதல் முறையாக 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்
வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹிம் 4 இடங்கள் முன்னேறி தரவரிசையில் 26-வது இடத்தை அடைந்துள்ளார். லிட்டன் தாஸ் 78-வது இடத்தில் உள்ளார்.
பந்துவீச்சாளர்கள் வரிசையில் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் தங்கள் கிரிக்கெட் தரவரிசையில் மிக உயர்ந்த இடத்தை அடைந்துள்ளார்கள். 716 புள்ளிகளுடன் இஷாந்த் சர்மா 17-வது இடத்தைப் பெற்றுள்ளார். இதற்கு முன் கடந்த 2011-ம் ஆண்டு இஷாந்த் சர்மா 7-வது இடத்தில் இருந்தார்.
மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் 672 புள்ளிகளுடன் 21-வது இடத்தில் உள்ளார். சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் ஒரு இடம் முன்னேறிய 772 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும், பும்ரா 794 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.
ரவீந்திர ஜடேஜா 725 புள்ளிகளுடன் பந்துவீச்சாளர்கள் வரிசையில் 15-வது இடத்திலும் ஆல்ரவுண்டர்கள் வரிசையில் 2-வது இடத்திலும் நீடிக்கிறார். ஆல்ரவுண்டர் வரிசையில் ஹோல்டர் முதலிடத்தில் உள்ளார். அஸ்வின் 5-வது இடத்தில் உள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
42 mins ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago