பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 4 ஆட்டங்களில் விளை யாடி ஒரு வெற்றியை கூட பதிவுசெய்யாத இந்திய அணி வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் ஓமனுடன் இன்று மோதுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் குவாஹாட்டியில் ஓமன் அணிக்கு எதிராக நடைபெற்ற முதற்கட்ட ஆட் டத்தில் சுனில் சேத்ரி தொடக்கத் திலேயே அடித்த கோல் இந்திய அணி வெற்றி பெறக்கூடும் என்ற நம்பிக்கையை கொடுத்தது. ஆனால் வளைகுடா நாடான ஓமன் கடைசி 10 நிமிடங்களே எஞ்சி யிருந்த நிலையில் இரு கோல் களை அடித்து இந்திய அணியின் கனவை தகர்த்தது.
ஓமன் அணி இதுவரை 4 ஆட் டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 9 புள்ளிகள் பெற்று ‘இ’ பிரிவில் 2-வது இடத் தில் உள்ளது. கடைசியாக அந்த அணி இதே மஸ்கட் மைதானத்தில் வங்கதேசத்தை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தியிருந்தது.
அதேவேளையில் இந்திய அணி 4 ஆட்டங்களில் விளையாடி 3 டிரா, ஒரு தோல்வியுடன் 3 புள்ளி கள் பெற்று 4-வது இடத்தில் உள் ளது. ஆசிய சாம்பியனான கத்தார் அணிக்கு எதிரான ஆட்டத்தை கோல்களின்றி டிரா செய்த இந்திய அணி தன்னைவிட தரவரிசையில் பின்தங்கிய வங்கதேசம், ஆப் கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தை 1-1 என்ற கோல் கணக் கில் டிரா செய்து ஏமாற்றம் அளித்தது.
இன்றைய ஆட்டத்தில் ஓமன் அணியை வீழ்த்தினால் மட்டுமே இந்திய அணியால் அடுத்த சுற்றுக் கான வாய்ப்பை பெற முடியும். மாறாக தோல்வியடைந்தால் 2022-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறும் வழியில் இருந்து விலக நேரிடும். ஒருவேளை இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்தால் ஓமன் அணியைவிட 9 புள்ளிகள் பின் தங்கிய நிலையில் இருக்க வேண்டியது வரும்.
இந்த சூழ்நிலை ஏற்பட்டால் எஞ்சியுள்ள 3 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றாலும் ஓட்டுமொத்தமாக 12 புள்ளி களையே பெற முடியும். 5 அணி கள் உள்ள இ பிரிவில் கத்தார் 10 புள்ளிகளுடன் தற்போது முதலிடம் வகிக்கிறது. ஆசிய அளவில் மொத்தம் 8 பிரிவுகளில் பல்வேறு அணிகள் தகுதி சுற்றில் விளையாடி வருகின்றன.
இதனால் ஒவ்வொரு பிரிவிலும் 2-வது இடம் பிடிக்கும் அணிகள் கூட 3-வது கட்ட சுற்றுக்கு நேரடி யாக தகுதி பெறுவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஓமன் அணிக்கு எதிரான ஆட்டத்தை டிராவில் முடித்தாலும் இந்திய அணி அடுத்த கட்டத்துக்கு நகர்வது சிக்கல்தான்.
இந்திய அணி மீதமுள்ள தனது 3 ஆட்டங்களை அடுத்த ஆண்டு தான் எதிர்கொள்கிறது. மார்ச் 26-ம் தேதி சொந்த மண்ணில் கத்தாரை யும், ஜூன் 4-ம் தேதி வங்கதேசத்தில் அந்த அணிக்கு எதிராகவும், ஜூன் 9-ம் தேதி சொந்த மண்ணில் ஆப்கானிஸ்தானையும் சந்திக் கிறது இந்திய அணி.
ஓமன் அணிக்கு எதிரான ஆட் டத்தை குறைந்த பட்சம் டிரா செய் தால் 2023-ம் ஆண்டு நடைபெற உள்ள ஆசிய கோப்பை தகுதி சுற்றுக்கு இந்திய அணி நேரடியாக தகுதி பெறலாம். இகோர் ஸ்டிமாக் பயிற்சியின் கீழ் விளையாடி வரும் இந்திய அணி, உலகக் கோப்பை தகுதி சுற்றின் 4 ஆட்டங்களிலும் தற்காப்பு ஆட்டத் தில் மிகவும் திணறி வருகிறது. அதோடு மட்டும் அல்லாது கோல் கள் அடிப்பதிலும் தேக்கம் அடை கிறது. கோல்கள் அடிப்பதற்கான வாய்ப்புகளை சிறப்பாக உருவாக் கினாலும் பந்தை கோல் வலைக் குள் திணிப்பதில் விவேகம் குறைந்துவிடுகிறது. மேலும் சுனில் சேத்ரியை மட்டுமே ஒட்டுமொத்த அணியும் நம்பியிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
இதுவரை ஓமனுக்கு எதிராக இந் திய அணி 11 ஆட்டங்களில் விளை யாடி உள்ளது. இதில் ஒன்றில் கூட இந்திய அணி வெற்றி பெற்றது இல்லை. அதேவேளையில் ஓமன் அணி 8 ஆட்டங்களில் வெற்றியை பதிவு செய்துள்ளது. மீதம் உள்ள 3 ஆட்டங்களும் டிராவில் முடிவடைந்திருந்தது.
நேரம்: இரவு 8.30
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago