குர்பாஸ் காட்டடி: டி20தொடரை வென்ற ஆப்கன்: நடையைக் கட்டிய நடப்பு சாம்பியன் மே.இ.தீவுகள்

By க.போத்திராஜ்


விக்கெட் கீப்பர் குர்பாஸ் காட்டடி ஆட்டம், நவீன் உல்ஹக்கின் வேகப்பந்துவீச்சு ஆகியவற்றால் லக்னோவில் நடந்த மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டி20 ஆட்டத்தில் 29 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டி20 தொடரைக் கைப்பற்றியது ஆப்கானிஸ்தான் அணி.

முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் சேர்த்தது. 157 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் மட்டுமே சேர்த்து 29 ரன்களில் தோல்வி அடைந்தது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொரை 2-1 என்ற கணக்கில் நடப்பு டி20 சாம்பியன் மேற்கிந்தியத்தீவுகள் அணியை வென்றுள்ளது ஆப்கானிஸ்தான்.

மே.இ.தீவுகள் அணியிடம் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்த ஆப்கானிஸ்தான் அணி டி20தொடரை வென்று பதிலடி கொடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பரும், தொடக்க ஆட்டக்காரருமான குர்பாஸ் களத்தில் மே.இ.தீவுகள் பந்துவீச்சை நொறுக்கி எடுத்துவிட்டார். காட்டடி அடித்த குர்பாஸ் 52பந்துகளில் 5சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 79 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அதேபோல பந்துவீச்சில் ரஷித் கான் வழக்கம் போல் கட்டுக்கோப்பாக வீசினார். 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். வேகப்பந்துவீச்சாளர் நவீன் உல்ஹக் 24 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முஜிபுர்ரஹ்மான் 3 ஓவர்கள் வீசி 9 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

உத்தரப்பிரதேசம் லக்னோ நகரில் இந்த ஆட்டம் நேற்று நடந்தது. ஏற்கனவே இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றிருந்ததால், 3-வது போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ஆப்கானிஸ்தான் அணி 12 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. காட்ரெல் பந்துவீச்சில் ஜஜாய்(0), ஜனத்(2) ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய வீரர் ஜர்தனும் ஒருரன்னில் வெளியேறினார்.

4-வது விக்கெட்டுக்கு அஸ்கர் ஆப்கன், தொடக்க வீரர் குர்பஸ் இருவரும் சேர்ந்து அணியை மீட்டெடுத்தனர். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்துப்பிரிந்தனர். அஸ்கர் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நஜ்புல்லா ஜத்ரன்(14), முகமது நபி(15) ஆகியோர் களத்தில் நின்று குர்பஸுக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர்.

குர்பஸ் களத்தில் நின்றி 360 டிகிரி கோணத்தில் மே.இ.தீவுகள் வீரர்களின் பந்துவீச்சை நொறுக்கிஎடுத்தார். 38 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

அதிரடியாக ஆடிய குர்பாஸ் 6பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 79 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கடைசி 10 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 93 ரன்கள் சேர்த்தது.குத்புதீன் நயிப் 4, நவின் உல் ஹக் 2 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மே.இ.தீவுகள் தரப்பில் கீமோ பால், காட்ரெல், வில்லியம்ஸ்ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

157 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் மே.இ.தீவுகள் அணிகளமிறங்கியது. தொடக்கத்தில் இருந்தே ஆப்கானிஸ்தான் வீரர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசினார்கள். இதனால் விக்கெட்டுகளை இழந்தும், ரன்களை சேர்க்கமுடியாமலும் கடும் சிரமப்பட்டனர். ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சும், வேகப்பந்துவீச்சும் மெருகேறியுள்ளது. குறிப்பாக முஜிபுர் ரஹ்மான், ரஷித் கான் பந்துவீச்சை மே.இ.தீவுகளால் எதிர்கொள்ள முடியவில்லை.

முஜிபுர் ரஹ்மான் வீசிய 2வது ஓவரில் சிம்மன்ஸ் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கிங் ஒரு ரன்னில் நவின் உல் ஹக் பந்துவீச்சில் வெளியேறினார். ரஷித் கான் பந்துவீச்சில் ஹெட்மெயர் 11 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
அதிரடி ஆட்டக்காரர் பொலார்ட் 11 ரன்னில் நவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தாலும் ஷாய் ஹோப் நிதானமாக ஆடி அரைசதம் அடித்தார். ஹோப்பின் பேட்டிங் ஆப்கானிஸ்தானுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது. ஆனால், குல்புதின் நயிப் பந்துவீச்சில் ஹோப் 52 ரன்கள் சேர்த்த நிலையில் அஸ்கரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஹோப் ஆட்டமிழந்தவுடன் மே.இ.தீவுகள் அணியின் ரன் வேகம் குறைந்தது.

கடைசி 2 ஓவர்களில் 39 ரன்கள் சேர்க்க வேண்டிய நிலைக்கு மே.இ.தீவுகள் தள்ளப்பட்டது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹோல்டர் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹோல்டர் ஆட்டமிழந்ததும் ஒட்டுமொத்த நம்பிக்கையும் தகர்ந்தது. பியரே ஒரு ரன்னிலும், கீமோ பால் 4 ரன்னிலும் இறுதிவரைஆட்டமிழக்காமல் இருந்தனர்.
20 ஓவர்கள் முடிவில் மே.இ.தீவுகள் அணி 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வி அடைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

59 mins ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்