2020-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலம் கொல்கத்தாவில் அடுத்த மாதம் நடக்க உள்ள நிலையில் அணிகளுக்கு இடையே வீரர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அணி மாறி விளையாடும் வீரர்கள் யார் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.
அஸ்வின்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக கடந்த 2 சீசன்களாக விளையாடி வந்த ஆர்.அஸ்வின் தற்போது அங்கிருந்து அணி மாறி அடுத்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். அஸ்வின் ரூ.7.6 கோடிக்கு மாற்றப்படுகிறார்.
ரஹானே
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கடந்த 9 சீசன்களாக விளையாடி வந்த அஜின்கயே ரஹானே தற்போது அந்த அணியில் இருந்து டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக அடுத்த சீசனில் விளையாட உள்ளார். இவரை ரூ.4 கோடிக்கு மாற்றியுள்ளது ராஜஸ்தான் அணி.
டிரன்ட் போல்ட்
நியூஸிலாந்து அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் டிரன்ட் போல்ட், டெல்லி கேபிடல்ஸ் அணியில் விளையாடி வந்தார். அடுத்த சீசனில் இருந்து நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். இவரின் மதிப்பு ரூ.2.2 கோடியாகும்.
அங்கித் ராஜ்பூத்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்த வலது கை வேகப்பந்துவீச்சாளர் ராஜ்பூத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார். இவரை ரூ.3 கோடிக்கு வாங்கியுள்ளது ராஜஸ்தான் அணி. ஐபிஎல் போட்டியில் அறிமுகமாகிய உடனே 5 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் ராஜ்புத் என்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணப்பா கவுதம்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்த கிருஷ்ணப்பா கவுதம் ரூ.6.2 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார். கடந்த சீசன்களில் மொத்தம் 22 ஆட்டங்களில் கவுதம் விளையாடியுள்ளார்.
வீரர்
முன் இருந்த அணி
2020 ஐபிஎல் அணி
ஆர்.அஸ்வின்
கிங்ஸ்லெவன் பஞ்சாப்
டெல்லி கேபிடல்ஸ்
அங்கித் ராஜ்புத்
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
ராஜஸ்தான் ராயல்ஸ்
டிரன்ட் போல்ட்
டெல்லி கேபிடல்ஸ்
மும்பை இந்தியன்ஸ்
ஷெர்பான் ரூதர்போர்ட்
டெல்லி கேபிடல்ஸ்
மும்பை இந்தியன்ஸ்
ஜெகதீசா சுஜித்
டெல்லி கேபிடல்ஸ்
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
தவால் குல்கர்னி
ராஜஸ்தான் ராயல்ஸ்
மும்பை இந்தியன்ஸ்
கிருஷ்ணப்பா கவுதம்
ராஜஸ்தான் ராயல்ஸ்
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
மயங்க் மார்க்கண்டே
டெல்லி கேபிடல்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ்
ராகுல் திவேஷியா
டெல்லி கேபிடல்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ்
அஜின்கயே ரஹானே
ராஜஸ்தான் ராயல்ஸ்
டெல்லி கேபிடல்ஸ
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago