ஹாங் காங் ஓபன் பாட்மிண்டனில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஹெச்.எஸ்.பிரனோய் 2-வது சுற்றுக்கு முன்னேறினர். ஹாங் காங்கில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 6-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து, 19-ம் நிலை வீராங்கனையான கொரியாவின் கிம் கா யூனை எதிர்த்து விளையாடினார்.
இதில் சிந்து 21-15, 21-16 என்றநேர் செட்டில் வெற்றிபெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 8-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நெவால் முதல் சுற்றில் 13-21, 20-22 என்றநேர் செட்டில் 22-ம் நிலை வீராங்கனையான சீனாவின் காய் யன் யனிடம் தோல்வியடைந்தார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 28-ம் நிலை வீரரான இந்தியாவின் பிரனோய் 21-17, 21-17 என்ற நேர் செட்டில் 29-ம் நிலை வீரரான சீனாவின் ஹுவாங் யூ ஸியாங்கை வீழ்த்தினார்.
பிரனோய் தனது 2-வது சுற்றில் 6-ம் நிலை வீரரான இந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டியை சந்திக்கிறார். அதேவேளையில் 16-ம் நிலை வீரரான இந்தியாவின் சமீர்வர்மா 11-21, 21-13, 8-21 என்ற செட்கணக்கில் 26-ம் நிலை வீரரான சீன தைபேவின் வாங் ஸு வெயிடம் தோல்வியடைந்தார்.
- பிடிஐ
முக்கிய செய்திகள்
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago