உலக தடகள சாம்பியன்ஷிப்: 110 மீ. தடை தாண்டுதல் ஓட்டத்தில் தங்கம் வென்றார் ரஷ்ய வீரர் செர்ஜி

By ஏஎஃப்பி

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் 110 மீ. தடை தாண்டுதல் ஓட்டத்தில் ரஷ்ய வீரர் செர்ஜி ஷுபென்கோவ் தங்கம் வென்றார்.

15-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடை பெற்று வருகிறது. 7-வது நாளான நேற்று நடைபெற்ற ஆடவர் 110 மீ. தடை தாண்டுதல் ஓட்டத்தில் இரு முறை ஐரோப்பிய சாம்பியன் பட்டம் வென்றவரான ரஷ்யாவின் செர்ஜி ஷுபென்கோவ் 12.98 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென் றார்.

இதன்மூலம் அவர் புதிய தேசிய சாதனையும் படைத்துள் ளார். செர்ஜிக்கு அடுத்தபடியாக ஜமைக்காவின் ஹேன்ஸ்லே பர்ச்மென்ட் 13.03 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதேபிரிவில் ஒலிம்பிக் சாம்பியனாக இருப்பவரும், உலக சாதனையை வைத்திருப் பவருமான அமெரிக்காவின் ஏரீஸ் மெரிட்டுக்கு (13.04) வெண்கலப் பதக்கமே கிடைத்தது.

மகளிர் 100 மீ. ஓட்டம்

மகளிர் 100 மீ. ஓட்டத்தில் ஜமைக்க வீராங்கனை டேனிலே வில்லியம்ஸ் 12.57 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். இது அவருடைய ‘பெர்சனல் பெஸ்ட்’ நேரமாகவும் அமைந்தது. அவருக்கு அடுத்தபடியாக ஜெர்மனியின் சின்டி ரோல்டெர் 12.59 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கமும், பெலாரஸின் அலினா டலாய் (12.66 விநாடி) வெண்கலமும் வென்றனர். அலினா 12.66 விநாடிகளில் இலக்கை கடந்ததன் மூலம் புதிய தேசிய சாதனை படைத்துள்ளார்.

நீளம் தாண்டுதல்

மகளிர் நீளம் தாண்டுதல் போட்டியில் அமெரிக்காவின் டியானா பர்டோலெட்டா தனது கடைசி வாய்ப்பில் 7.14 மீ. தூரம் தாண்டி தங்கம் வென்றார். பிரிட்டனின் சாரா பிராக்டர் (7.07 மீ.) வெள்ளியும், செர்பியாவின் இவானா ஸ்பேனோவிச் (7.01 மீ.) வெண்கலமும் வென்றனர்.

மகளிர் 200 மீ. ஓட்டம்

மகளிர் 200 மீ. ஓட்டத்தில் நெதர்லாந்தின் டப்னே ஷிப்பெர்ஸ் 21.63 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றதோடு, சாம்பியன்ஷிப் சாதனை மற்றும் ஐரோப்பிய சாதனையைப் படைத்துள்ளார். ஜமைக்காவின் இலானே தாம்ப்சன் 21.66 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்றதோடு, தனது ‘பெர்சனல் பெஸ்ட்’ நேரத்தையும் பதிவு செய்தார்.

ஒலிம்பிக்கில் இரு முறை சாம்பியன் பட்டம் வென்ற மற்றொரு ஜமைக்க வீராங்கனையான வெரோனிகா கேம்ப்பெல் பிரவுன் 21.97 விநாடிகளில் இலக்கை எட்டி வெண்கலம் வென்றார். 2011 உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இவர், 2007, 2009 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனாவுக்கு முதல் தங்கம்

மகளிர் 20 கி.மீ. நடைப் போட்டியில் சீன வீராங்கனை லியூ ஹாங் 1 மணி, 27.45 நிமிடங் களில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். இதுதான் இந்த உலக சாம்பியன்ஷிப்பில் சீனா வென்ற முதல் தங்கம். இதே பிரிவில் லியூ ஹாங்கின் தங்கை லூ ஸியூஸி வெள்ளியும், உக்ரை னின் ஆல்யானோவ்ஸ்கா வெண் கலமும் வென்றனர்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்