ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு முன்னுரிமை கொடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியில் டெஸ்ட் இடத்தை இழந்தார் சுனில் நரைன்.
அடுத்த மாதம் நியூசீலாதுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் விளையாடுகிறது.
இதற்கு வீரர்கள் ஜூன் 1ஆம் தேதிக்குள் ஒப்புதல் தெரிவிக்க வேண்டும். அந்த வகையில் சுனில் நரைன் நாளை ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கே முன்னுரிமை கொடுத்துள்ளார்.
இதனால் அவரது டெஸ்ட் இடம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய இயக்குனர் ரிச்சர்ட் பைபஸ் கூறுகையில், "சர்வதேச கிரிக்கெட்டை கட்டிக்காப்பதில் வாரியத்திற்குப் பொறுப்பு உள்ளது, டெஸ்ட் கிரிக்கெட்டிற்கே முன்னுரிமை அளிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் சுனில் நரைன் 21 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதில் 18 விக்கெட்டுகள் நியூசீலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட்களி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago