பெங்களூருவில் நடைபெற்ற விஜய் ஹஜாரே ட்ராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கர்நாடக அணி தமிழக அணியை 60 ரன்களில் வீழ்த்தி விஜய் ஹஜாரே டிராபியை வென்றது.
இந்தத் தொடரில் தமிழ்நாடு அணி ஒரேயொரு போட்டியில்தான் தோற்றது, அது இறுதிப் போட்டியாக அமைந்து விட்டது. முதலில் பேட் செய்த தமிழ்நாடு அணி 49.5 ஓவர்களில் 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இன்று பிறந்த தினம் கொண்டாடும் கர்நாடக வேகப்பந்து வீச்சாளர் அபிமன்யு மிதுன் இன்னிங்சின் 50வது ஓவரில் தமிழ்நாடு வீரர்கள் ஷாருக்கான் (27), மொகமது(10), முருகன் அஸ்வின் (0) ஆகியோர் விக்கெட்டுகளை வரிசையாக வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை புரிந்தார்.
தொடர்ந்து ஆடிய கர்நாடக அணி 23 ஓவர்களில் 146/1 என்று 6.34 ரன் விகிதத்தில் சென்று கொண்டிருந்த போது மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது, இதனையடுத்து டக்வொர்த் முறைக்கு இணையான விஜேடி கணக்கீட்டு முறைப்படி கர்நாடகா எடுக்க வேண்டிய 86 ரன்களுக்கும் மேலாக 60 ரன்கள் கூடுதலாகப் பெற்றதால் சாம்பியன் என்று அறிவிக்கப்பட்டது.
கர்நாடகா தரப்பில் இந்திய சர்வதேச வீரர்களான கே.எல்.ராகுல் 72 பந்துகளில் 52 ரன்களையும் மயங்க் அகர்வால், 55 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 69 ரன்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
அபிமன்யு மிதுன் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தன் முதல் 5 விக்கெட்டுகளை ஹாட்ரிக் சாதனையுடன் கைப்பற்றியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
தமிழக அணி பேட்டிங்கைத் தொடங்கிய போது மிதுன் பந்தை எட்ஜ் செய்து முரளி விஜய் டக் அவுட் ஆகி வெளியேறினார். ரவிச்சந்திரன் அஸ்வின் 3ம் நிலையில் இறங்கினார், ஆனால் 13 பந்துகளில் 8 ரன்கள் என்று அவர் சொதப்பி கவுஷிக்கிடம் ஆட்டமிழந்தார்.
ஆனால் இந்தத் தொடர் முழுதுமே நல்ல பார்மில் இருக்கும் அபினவ் முகுந்த் (85), பாபா அபராஜித் (66) இணைந்து 23 ஓவர்களில் 124 ரன்களைச் சேர்த்து அணியை மிட்டுக் கொடுத்தனர். விஜய் சங்கர் 35 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 38 ரன்கள் எடுத்து அசத்தினார். முகுந்த் 85 ரன்களில் ஜெயின் பந்திலும் அபராஜித் ரன் அவுட்டும் ஆக தமிழ்நாடு அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் 11 ரன்களில் கவுதமிடம் ஆட்டமிழந்தார்.
ஷாருக்கான் 23 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து மிதுன் ஹாட்ரிக் சாதனையின் முதல் விக்கெட்டாக வெளியேற மொகமட், முருகன் அஸ்வினை ஹாட்ரிக்கில் வீழ்த்தி மிதுன் சாதனையுடன் தமிழ்நாடு அணி 252 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர் நாயகனாக அபிமன்யும் மிதுன் தேர்வு செய்யப்பட்டார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 mins ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago