இந்தியாவில் மெல்போர்னையும் விஞ்சும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்

By செய்திப்பிரிவு

அகமதாபாத், ஸ்போர்ட்ஸ்டார்

சுமார் 63 ஏக்கர்களில், 110,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அகமதாபாதில் விரைவில் திறக்கத் தயாராகி வருகிறது.

மெல்போர்ன் ரசிகர்கள் கொள்ளளவைக் காட்டிலும் கூடுதலாக 10,000 பேர் இதில் அமர்ந்து போட்டிகளைப் பார்க்க முடியும்.

எம்சிஜி என்று அழைக்கப்படும் மெல்போர்ன் கிரிக்கெட் ஸ்டேடியத்தை வடிவமைத்த ஆஸ்திரேலியாவின் பாப்புலஸ் நிறுவனம்தான் அகமதாபாத்தில் இந்த மொடீரா ஸ்டேடியத்தையும் வடிவமைத்துள்ளது.

முன்பு இதே ஸ்டேடியத்தில் 55,000 பேர் மட்டுமே அமர்ந்து பார்க்க முடியும், இப்போது அது இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. ஸ்டேடியத்தில் 76 கார்ப்பரேட் பாக்ஸ்கள், 4 ஓய்வறைகள், 3 பயிற்சி மைதானங்கள், உள்ளரங்க கிரிக்கெட் அகாடமி, ஒலிம்பிக் போட்டிகள் போன்ற அமைப்பில் நீச்சல் குளம்.

63 ஏக்கர்களில் சுமார் ரூ.700 கோடி செலவில் மைதானத்தினுள்ளும் புறமும் கட்டுமானப் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. ஜனவரி 2020-ல் ஸ்டேடியம் முழுதும் கட்டி முடிக்கப்பட்டிருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE