கராச்சி
பக்கர் ஜமான், அபித் அலி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், கராச்சியில் இலங்கை அணிக்கு எதிராக நடந்த 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்று தொடரை வென்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது. முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. ஆட்டநாயகனாக அபித் அலியும், தொடர் நாயகனாக பாபர் ஆசமும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் குவித்தது. 298 ரன்கள் இலக்காக வைத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 48.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர்கள் பக்கர் ஜமான் (76), அபித் அலி (74) கூட்டணி 123 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். அதன்பின் இடதுகை ஆட்டக்காரர் ஹாரிஸ் சோஹைலின் அதிரடி அரை சதம் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.
இலங்கை அணி வீரர்கள் சவாலான இலக்கை வைத்திருந்த போதிலும் கட்டுக்கோப்பான பந்துவீச்சும், பாகிஸ்தானுக்கு நெருக்கடி தரக்கூடிய பந்துவீச்சும் இல்லாமல் போனதே இலங்கை அணியின் தோல்விக்குக் காரணமாகும்.
ஒருவேளை பந்துவீச்சை இன்னும் கட்டுக்கோப்பாக வீசி இருந்தால், நிச்சயம் இலங்கை வென்று தொடரை சமன் செய்திருக்கும்.
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் தன்ஷுகா குணதிலகா சதம் அடித்து 133 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 16 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கும். இலங்கை அணியில் இவர் மட்டுமே ஓரளவுக்கு கவுரமான ஸ்கோரை அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
2-வது விக்கெட்டுக்கு திரிமானேயுடன் சேர்ந்து குணதிலகா 88 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும். திரிமானே 36 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய பெரேரா (13), பனுகா (36), ஜெயசூர்யா (3), சனகா (43), சில்வா (10) ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடக்க வீரராக களமிறங்கிய குணதிலகா 44 ஓவர்கள் வரை விளையாடி 133 ரன்களில் ஆட்டமிழந்தார்.
50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் சேர்த்தது இலங்கை அணி. பாகிஸ்தான் தரப்பில் முகமது அமீர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
298 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் பக்கர் ஜமான், அபித் அலி இருவரும் வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்னர். முதல் விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். 10 பவுண்டரிகள் உள்பட 74 ரன்கள் சேர்த்து அபித் அலி ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த பாபர் ஆசம் (31) ரன்களில் குமாரா பந்துவீச்சில் வெளியேறினார். நிதானமாக ஆடிய பக்கர் ஜமான் 76 ரன்கள் சேர்த்து பிரதீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கேப்டன் சர்பிராஸ் அகமது 24 ரன்களில் வெளியேறினார்.
ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியை நோக்கிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஹாரிஸ் சோஹைல் களத்தில் இறங்கி அதிரடி ஆட்டத்தைக் கையாண்டதால் ஆட்டத்தின் போக்கு மாறியது. 46 பந்துகளில் அரை சதம் அடித் சோஹைல் 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் இப்திகார் அகமது (28), வகாப் ரியாஸ் (1) களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர். இலங்கை தரப்பில் நுவான் பிரதீப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago