12வது தொடர் டி20 வெற்றியை ஈட்டி ஆப்கான் சாதனை: முகமது நபியின் காட்டடி, முஜீபின் பந்துவீச்சில் வ.தேசம் வீழ்ந்தது

By செய்திப்பிரிவு

முத்தரப்பு டி20 தொடரில் ஆப்கன அணி நேற்று வங்கதேசத்தையும் வீழ்த்தி தொடர்ச்சியாக 12 டி20 சர்வதேச போட்டிகளில் வென்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.

முதலில் பேட் செய்த ஆப்கான் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. ஆப்கான் அணியின் அஷ்கர் ஆப்கான் 40 ரன்களையும் அதிரடி ஆல்ரவுண்டர் முகமது நபி 54 பந்துகளில் 3 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 84 ரன்களையும் விளாசித்தள்ளினர். வங்கதேசம் தரப்பில் சைபுதின் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஷாகிப் அல் ஹசன் 4 ஒவர்கள் 1 மெய்டன் 18 ரன்கள் கொடுத்து மிகப்பிரமாதமாக வீசி சிக்கனம் காட்டினார்.

தொடர்ந்து ஆடிய வங்கதேச அணியில் எந்த வீரரும் அரைசதம் எட்ட முடியவில்லை. மஹமுதுல்லா மட்டுமே அதிகபட்சமாக 44 ரன்களை எடுத்தார். இதனையடுத்து வங்கதேசம் 19.5 ஓவர்களில் 139 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. குல்பதின் நயிப், ரஷீத் கான், ஃபரீத் அகமெட் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற மற்றொரு ஸ்பின்னர் முஜிபுர் ரஹ்மான் 4 ஓவர்கள் 15 ரன்கள் 4 விக்கெட் என்று அசத்தினார்.

ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்த போது 40/4 என்ற நிலையில் அதிரடி ஆல்ரவுண்டர் நபி இறங்கினார். கடைசி 5 ஓவர்களில் பெரிய பெரிய ஷாட்களாக ஆடி சிக்சர்களைப் பறக்கவிட்டார். அஷ்கர் ஆப்கனுடன் இணைந்து 5வது விக்கெட்டுக்காக 79 ரன்களை விரைவு கதியில் சேர்த்தார்.

பவர் ப்ளேயில் ஷாகிப் உல் ஹசன், சைஃபுதின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்த ரஹ்மத்துலா குர்பஸ், சஸாய், நஜீப் தரகய், நஜிபுல்லா ஸத்ரான் ஆகியோர் சடுதியில் வெளியேறினர்.

ஆப்கன், நபி இருவரும் விக்கெட்டுகளினால் செட்டில் ஆவதற்காக கொஞ்சம் நிதானம் காட்ட ரன் விகிதம் குறைந்தது. பிறகு மொசடெக் ஹுசைன், தைஜுல் இஸ்லாம் பந்துகளில் சிக்சர்களுடன் அதிரடி முறைக்குத் திரும்பினர். 79 ரன்களைச் சேர்த்த பிறகு 17வது ஓவரில் ஆப்கன் வெளியேறினார்.

அவர் வெளியேறிய பிறகு முஸ்தபிசுர் ரஹ்மானை ஒரு மிகப்பெரிய சிக்சரை அடித்தார் நபி. 18வது ஒவரில் நபி மீண்டும் அதகளம் செய்து 21 ஓவர்களை விளாசித்தள்ளினார். இந்த ஓவரை சவுமியா சர்க்கார் வீசினார். பிறகு 19வது ஓவரை சைபுதின் வீச மேலும் 2 சிக்சர்கள் விளாசப்பட்டது. ஆனால் சதம் எடுப்பதற்கு முன்பாக முஸ்தபிசுர் ரஹ்மான், நபியை வீழ்த்தினார், 20வது ஓவரில் 3 ரன்களையே கொடுத்தார் ஆப்கான் 169/6 என்று முடிந்தது.

புதிய தொடக்கம் காட்டிய வங்கதேசம்:

முஷ்பிகுர் ரஹிம், லிட்டன் தாஸை தொடக்க வீரராக இறக்கியது வங்கதேசம். ஆனல் முதல் 5 ஓவர்களுக்குள் 4 விக்கெட்டுகளை வங்கதேசம் இழந்தது, லிட்டன் தாஸை முஜிபுர் ரஹ்மான் காலி செய்ய, ஃபரீத் அகமெடை ஸ்கூப் செய்ய முயன்று முஷ்பிகுர் பவுல்டு ஆனார். 5வது ஓவரில் ஷாகிப் அல் ஹசன் (15), சவுமியா சர்க்கார் (0) இருவரையும் முஜீப் உ ர் ரஹ்மான் வீழ்த்தினார்.

மஹ்முதுல்லா மறுகட்டுமானம் செய்வதோடு ரன் விகிதத்தையும் பரமாரிக்க வேண்டியிருந்தது, இதற்கு எதிர்முனை வீரர் சபீர் ரஹ்மான் ஒத்துழைக்கவில்லை அவர் 27 பந்துகளில் 24 ரன்களை மட்டுமே எடுத்தார், மஹ்முதுல்லா கூட 39 பந்துகளில் 44 ரன்களையே எடுக்க முடிந்தது. 95/6 என்ற நிலையிலிருந்து ஒன்றும் செய்ய முடியாமல் 139 ரன்களுக்கு மடிந்தது வங்கதேசம்.

ஆட்ட நாயகன் முகமது நபி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்