தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 அணி அறிவிப்பு: தோனி, பும்ரா பெயர் இல்லை; வந்தார் ஹர்திக்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக செப்டம்பர் 15ம் தேதி தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் ஹர்திக் பாண்டியா அணிக்குள் திரும்பியுள்ளார்.

அணியில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை, ரிஷப் பந்த் பெயர் இடம்பெற்றுள்ளது. ஹர்திக் பாண்டியா பெயர் புவனேஷ்வர் குமாருக்குப் பதில் சேர்க்கப்பட்டுள்ளது.

அதே போல் 15 வீரர்கள் கொண்ட பட்டியலில் தோனி இடம்பெறவில்லை, ஜஸ்பிரித் பும்ரா பெயரும் இடம்பெறவில்லை. ஆகவே பும்ரா, புவனேஷ்வர் இல்லை என்பதால் அணியில் கலீல் அகமெட், நவ்தீப் சைனி, தீபக் சாஹர் ஆகியோருக்கு வாய்ப்புகள் வந்துள்ளன. அதே போல் ஸ்பின் பவுலிங்கில் ஜடேஜா, குருணால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், லெக் பிரேக் பவுலர் ராகுல் சாஹர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தரம்சலாவில் செப்15-ல் முதல் போட்டி, செப்.18 மற்றும் 22ம் தேதிகளில் மற்ற இரு போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்திய அணி விவரம்:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ராகுல், ஷிகர் தவண், ஷ்ரேயஸ் அய்யர், மணீஷ் பாண்டே, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, குருணால், வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், கலீல் அகமெட், தீபக் சாஹர், நவ்தீப் சைனி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE