போர்ட் ஆப் ஸ்பெயின்
இந்திய அணிக்கு எதிராக நடைபெற உள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்றுவிடுவேன் என்று கூறிய யுனிவர்ஸல் பாஸ் கிறிஸ் கெயிலுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மாறாக, சுழற்பந்து ஆல்ரவுண்டர் ரக்கீம் கார்ன்வால் அறிமுகமாகிறார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு இந்திய அணி பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இத்தொடர் முடிந்தபின் வரும் 22-ம் தேதி முதல் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர் தொடங்க உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து டெஸ்ட் போட்டியில் பங்கேற்காமல் இருந்து வந்த கிறிஸ் கெயில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடருடன் தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தார்.
உலகக்கோப்பை போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கெயில் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படவில்லை. இன்னும் 6 வாரங்களில் கெயில் 40 வயதை எட்டுகிறார். இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்திலும் 31 பந்துகளைச் சந்தித்த கெயில் 4 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார்.
டெஸ்ட் போட்டிக்குள் திரும்ப வருகிறேன் என்று கெயில் அறிவித்ததும், முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் கர்ட்லி அம்புரோஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
அம்புரோஸ் அளித்த பேட்டியில், " கிறிஸ் கெயில் ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவித்தால் பரவாயில்லை. ஆனால், டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 ஆண்டுகள் ஆகின்றபோது அதில் விளையாடுவேன் எனக் கூறுவது பின்னோக்கி நகர்வதாகும்.
அவருக்கு வாய்ப்பு அளித்தால், இளம் வீரர்களுக்கு என்ன செய்தியை நாம் சொல்லப்போகிறோம். டெஸ்ட் போட்டிக்கு கெயில் வரக்கூடாது" எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, இரு டெஸ்ட் போட்டிகளுக்கும் கிறிஸ் கெயில் தேர்வு செய்யப்படாமல் புறக்கணித்து கார்ன்வாலுக்கு வாய்ப்பு அளித்துள்ளது மே.இ.தீவுகள் வாரியம்.
கார்ன்வால் 2014-ம் ஆண்டில் இருந்து முதல்தரப் போட்டிகளில் விளையாடி 260 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், நடுவரிசையில் நல்ல பேட்டிங் செய்யும் திறமை கொண்டவர். இதுவரை 2,224 ரன்களை கார்ன்வால் குவித்துள்ளார்.
இந்தியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இரு அரை சதங்களை கார்ன்வால் அடித்திருந்தார். உடல் தகுதியின்மையால் அணிக்குள் வராமல் இருந்த கார்ன்வால் தற்போது உடல் தகுதி பெற்றதால் வாய்ப்பு பெற்றுள்ளார்.
மேலும் ஐபிஎல் தொடரின் போது காயம் அடைந்த வேகப் பந்துவீச்சாளர் அல்ஜாரி ஜோஸப் இன்னும் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை என்பதால் அவரையும் தேர்வுக்குழுவினர் பரிசீலிக்கவில்லை.
மே.இ..தீவுகள் அணி விவரம்:
ஜேஸன் ஹோல்டர் (கேப்டன்), கிரெய்க் பிராத்வெய்ட், டேரன் பிராவோ, ஷாம்ரா ப்ரூக்ஸ், ஜான் கேம்பெல், ராஸ்டன் சேஸ், ரக்கீம் கார்ன்வால், ஷேன் டோவ்ரிச், ஷானன் கேப்ரியல், ஷிம்ரன் ஹெட்மயர், ஷாய் ஹோப், கீமோ பால், கீமர் ரோச்
பிடிஐ
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago