கெயிலின் சாதனையை நாளை முறியடிப்பாரா ரோஹித் சர்மா?

லாடர்ஹில்,
மே.இ.தீவுகள் அணியின் அதிரடி வீரரும், யுனிவர்ஸல் பாஸ் என்று தன்னைத் தானே கூறிக்கொள்ளும் கிறிஸ் கெயிலின் சிக்ஸர் சாதனையை இந்திய அணியின் ரன் மெஷின் ரோஹித் சர்மா நாளை முறியடிப்பார் என எதிர்பார்க்ககப்படுகிறது.

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டித்தொடர் நாளை அமெரிக்காவின் புளோரிடா மாநிலம், லாடர்ஹில் நகரில் நடக்கிறது. 

இதுவரை டி20 போட்டித் தொடரில் மே.இ.தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் 58 ஆட்டங்களில் 105 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். கெயிலைத் தொடர்ந்து, நியூஸிலாந்து வீரர் மார்டின் கப்தில் 76 போட்டிகளில் 103 சிக்ஸர் அடித்து 2-வது இடத்தில் உள்ளார். 

3-வதுஇடத்தில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா 94 ஆட்டங்களில் 102 ரன்கள் சேர்த்து 3-வது இடத்தில் உள்ளார். கெயிலின் 105 சிக்ஸர்களை முறியடிக்க ரோஹித் சர்மாவுக்கு இன்னும் 4 சிக்ஸர்கள் மட்டுமே தேவைப்படுகிறது. 

நாளை ஆட்டத்தில் ரோஹித் சர்மா 4 சிக்ஸர்கள் அடித்துவிட்டால், டி20 வரலாற்றில் அதிகமான சிக்ஸர் அடித்த பேட்ஸ்மேன் எனும் பெருமையைப் பெறுவார். 

டி20 போட்டியில் அதிகமான ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் எனும் பெருமையை ரோஹித் சர்மா தக்கவைத்துள்ளார். இதுவரை 4 சதங்கள், 16 அரைசதங்கள் உள்பட 2,331 ரன்களை ரோஹித் சர்மா சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE