நான் இதையே யோசித்துக் கொண்டிருக்கப் போவதில்லை: ஏமாற்றத்தில் ஷுப்மன் கில்

By செய்திப்பிரிவு

மே.இ.தீவுகள் ஏ அணிக்கு எதிரான இந்தியா ஏ அணியின் தொடரில் பிரமாதமாக ஆடிய ஷுப்மன் கில் இந்திய அணியில் தன்னைத் தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்ததாகத் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இதைப்பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதை விட பெரிய அளவில் ரன்களை குவித்து தேர்வுக்குழுவின் கவனத்தைத் தன் மீது திருப்ப வைப்பதே தன் குறிக்கோள் என்கிறார் ஷுப்மன் கில் .

மே.இ.தீவுகள் ஏ அணிக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 3 அரைசதங்களுடன் 218 ரன்கள் எடுத்து தொடர் நாயகன் விருது வென்ற ஷுப்மன் கில் மட்டும் இந்திய அணியிலிருந்து விடுபட்டுப் போனார். மணீஷ் பாண்டே, ஷ்ரேயஸ் அய்யர் தேர்வு செய்யப்பட்டனர். 

இந்நிலையில் ஷுப்மன் கில் கூறியதாவது:

ஞாயிறன்று இந்திய சீனியர் அணி அறிவிப்புக்காகக் காத்திருந்தேன். ஏதாவது ஒரு அணியிலாவது என்னைத் தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் தேர்வு செய்யப்படவில்லை என்பது எனக்கு ஏமாற்றமாகவே உள்ளது. ஆனால் இதையே யோசித்துக் கொண்டிருக்கப் போவதில்லை. நான் தொடர்ந்து ரன்குவிப்பில் ஈடுபட்டு அணித்தேர்வுக்குழுவை என் பக்கம் ஈர்ப்பேன் என்று ஷுப்மன் கில் கிரிக்கெட் நெக்ஸ்ட் ஊடகத்தில் கூறினார்.

மே.இ.தீவுகள் தொடர் தனக்குப் பெரிய பாடமாக அமைந்தது என்ற ஷுப்மன் கில் தற்போது நல்ல பந்துகளை தடுத்தாடி கிரீசில் நீண்ட நேரம் நிற்பதன் முக்கியத்துவத்தைத் தனக்கு இந்தத் தொடர் கற்றுக் கொடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

-பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE