உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: எளிதான பிரிவில் இடம் பிடித்தது இந்திய அணி

கோலாலம்பூர் 

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்றில் ஒப்பீட்டளவில் இந்திய அணி எளிதான பிரிவில் இடம் பெற்றுள்ளது.

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 2022-ம் ஆண்டு கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கு ஆசிய அளவிலான 2-வது தகுதி சுற்றில் கலந்து கொள்ளும் அணி களின் பிரிவுகளை குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் நிகழ்ச்சி மலேசியாவின் தலை நகரான கோலாலம்பூரில் நேற்று நடைபெற்றது.

ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் போட்டி அட்டவணையில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த 40 அணிகள் 8 பிரிவுகளாக குலுக்கல் முறையில் இடம் பெற்றன. ஒவ்வொரு பிரிவிலும் 5 அணி கள் இடம் பிடித்தன. இதில் இந்திய அணி இ பிரிவில் இடம் பெற்றிருந் தது.

இதே பிரிவில் கத்தார், ஓமன், ஆப் கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் உள்ளூர் மைதானம் மற்றும் வெளிநாட்டு மைதானம் அடிப்படையில் ரவுண்ட் ராபின் முறையில் தங்களது ஆட்டங்களை விளையாடும். இந்த தகுதி சுற்று ஆட்டங்கள் வரும் செப்டம்பர் 5-ம் தேதி முதல் தொடங்குகிறது.

8 பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகளும், 2-வது இடத்தை பிடிக்கும் 4 சிறந்த அணிகளும் இறுதிக்கட்ட தகுதி சுற்றுக்கு தேர்வாகும்.

தகுதி சுற்றுக்கான அணிகள் தேர்வில் இந்திய அணி ஒப்பீட்டளவில் எளிதான பிரிவில் இடம் பெற்றுள்ளதாகவே கருதப் படுகிறது. ஏனெனில் ஈரான், ஜப்பான், கொரியா, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, ஈராக், உஸ்பெகிஸ்தான் போன்ற வலுவான அணிகள் இடம் பெற் றுள்ள பிரிவில் இடம் பெறுவதில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பித்துள்ளது.

இந்திய அணி தனது பிரிவில் முதலிடத்தை கைப்பற்றும் பட்சத்தில் இறுதிக்கட்ட தகுதி சுற்றில் விளையாட தகுதி பெறும். இ பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகளுள் ஓமன், கத்தார் ஆகிய அணிகள் இந்தியாவுக்கு கடும் சவால்கள் அளிக்கக்கூடும். 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக் கான தகுதி சுற்றிலும் ஓமன் அணி இடம் பெற்றிருந்த பிரிவில் இந்தியா இருந்தது.

2015-ம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டத்தில் ஓமன் அணி 2-1 என்ற கோல் கணக்கிலும், மஸ்கட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கிலும் இந்திய அணியை வென்றிருந்தது. ஆனால் கடந்த டிசம்பர் மாதம் இரு அணிகளும் அபுதாபியில் மோதிய ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிவடைந்திருந்தது.

தகுதி சுற்று பிரிவு குறித்து இந்திய கால் பந்து அணியின் பயிற்சியாளரான இகோர் ஸ்டிமாக் கூறுகையில், “இளம் இந்திய அணிக்கு இது கடும் சவால். கடினமான குழுவில் நாங்கள் இடம் பெற்றுள்ளோம். ஒவ்வொரு எதிரணியையும் நாங்கள் மதிக்க வேண்டும்.

எதிரணியை மதிப்பது குறித்து வீரர் களுக்கு கற்றுக்கொடுப்பேன். ஆனால் களத்தில் இறங்கிவிட்டால் வெற்றிக்காக எதையும் செய்வோம். இந்த வகையில் தான் அணியை நான் தயார் செய்ய உள்ளேன். நாங்கள் எங்களது பயணத்தின் தொடக்கத்தில் இருக்கிறோம். இந்தப் பயணம் நீண்ட தூரம் செல்லும் என நம்புகிறேன்” என்றார்.

அணிகளை தேர்வு செய்வதற்கான குலுக்கல் நிகழ்ச்சியில் போட்டிகளின் இயக்குநர் கிறிஸ்டியன் அன்ஜெர், ஆஸ் திரேலிய கால்பந்து ஜாம்பவான் டிம் கஹில் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். ஆசிய நாடுகளின் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் ஈரான் அணி 3-வது முறையாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறும் முனைப்பில் களமிறங்குகிறது. அந்த அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் ஈராக், பஹ்ரைன், ஹாங் காங், கம்போடியா அணிகள் உள்ளன.

2018-ம் ஆண்டு உலகக் கோப்பை தொட ரில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் பலம் வாய்ந்த பெல்ஜியம் அணியை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த ஜப்பான் அணி எஃப் பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் கிர்கிஸ் குடியரசு, தஜிகிஸ்தான், மியான்மர், மங்கோலியா ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.

1986-ம் ஆண்டுக்குப் பிறகு அனைத்து உலகக் கோப்பை தொடர்களுக்கும் தகுதி பெற்று வரும் தென் கொரியா ‘ஹெச்’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் வட கொரியா, லெபனான், துர்க்மேனிஸ்தான், இலங்கை அணிகளும் உள்ளன.

ஏ பிரிவில் சீனா, சிரியா, பிலிப்பைன்ஸ், மாலத்தீவுகள், குவாம் அணிகளும் ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, ஜோர்டான், சீன தைபே, குவைத், நேபாளம் அணிகளும் ‘டி’ பிரிவில் சவுதி அரேபியா, உஸ்பெகிஸ்தான், பாலஸ்தீனம், ஏமன், சிங்கப்பூர் அணிகளும், ‘ஜி’ பிரிவில் ஐக்கிய அரபு அமீரகம், வியட்நாம், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேஷியா அணிகளும் இடம் பெற்றுள்ளன.

சமீபத்தில் முடிவடைந்த கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் கத்தார் அணி சிறந்த திறனை வெளிப்படுத்தியிருந்தது. இதனால் அந்த அணி இந்தியாவுக்கு கடும் சவால்கள் தரக்கூடும். இந்திய அணி கடைசியாக கடந்த 1996-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடர் தகுதி சுற்று ஆட்டத்தில் கத்தாருடன் மோதியிருந்தது. இதில் கத்தார் அணி 6-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை பந்தாடியிருந்தது.

1994 முதல் 2018 வரை உள்ள காலக் கட்டங்களில் ஓமன் அணிக்கு எதிராக இந்தியா 7 ஆட்டங்களில் விளையாடி உள்ளது. இதில் 1994-ம் ஆண்டு நடை பெற்ற சுதந்திரகோப்பையில் மட்டுமே ஓமன் அணியை இந்தியா வென்றது. மேலும் அந்த அணிக்கு எதிராக 4 தோல்விகளையும், 2 டிராக்களையும் பதிவு செய்துள்ளது இந்திய அணி. கடைசியாக இரு அணிகளும் கடந்த 2018-ம் ஆண்டு இறுதியில் மோதிய ஆட்டம் கோல் அடிக்கப்படாத நிலையில் டிராவில் முடிந்திருந்தது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 8 ஆட்டங்களில் மோதியுள்ள இந்திய அணி 6 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப்பில் ஆப்கானிஸ்தான் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது இந்திய அணி. அதேவேளையில் வங்கதேச அணிக்கு எதிராக 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ள இந்திய அணி 15 வெற்றிகளை பெற்றுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE