எங்க துரதிர்ஷ்டம், இனிமேல் அதுபோல் ஒருபோதும் நடக்கக் கூடாது : நியூஸி. கேப்டன் வில்லியம்ஸன் வேதனை

By க.போத்திராஜ்

 

லண்டன், பிடிஐ

ஸ்டோக்ஸ் பேட்டில் பந்துபட்டு பவுண்டரி சென்றது எங்களின் துரதிர்ஷ்டம், இதுபோன்ற சூழல் இனிமேல் நடக்காது என நம்புகிறேன் என்று நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் வேதனையுடன் தெரிவித்தார்.

 

12-வது உலகக்கோப்பை மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி முதல்முறையாக வென்றது. லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் சேர்த்தது. 42 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

 

சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் சேர்க்க, நியூஸிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 15 ரன்கள் சேர்த்து சமனில் முடிந்தது. பவுண்டரி அதிகமாக அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து வென்றது. இங்கிலாந்து அணி 26 பவுண்டரிகள் அடித்த நிலையில், நியூஸிலந்து 17 பவுண்டரிகள் மட்டுமே அடித்திருந்தது.

 

கடைசி ஓவரில் 3 பந்துகளுக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, பென் ஸ்டோக்ஸ் அடித்த பந்தை தடுத்து கப்தில் விக்கெட் கீப்பர் லாதமிடம் எறிந்தார். 2-வது ரன்னுக்கு முயற்சித்த ஸ்டோக்ஸ் ரன் அவுட் ஆகிவிடுவோம் என அச்சப்பட்டு, கிரீஸின் முன் பேட்டோடு பாய்ந்தார். அப்பந்து ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு ஓவர் த்ரோவில் பவுண்டரி சென்றது. இதனால், அந்த ஒரு பந்தில் 6 ரன்கள் கிடைத்து ஆட்டம் திசை திரும்பியது. கடைசி 2 பந்தில் 3 ரன்Kள் அடிக்க முடியாமல் 2  ரன்கள் சேர்த்து ஆட்டம் முடிந்தது.

 

கோப்பையை கடைசி நேரத்தில் இழந்தது குறித்து நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் கூறியதாவது:

 

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில், அதிலும் கடைசி நேரத்தில் எங்களுக்கு இப்படியெல்லாம் நேர்ந்திருக்க கூடாது. பென் ஸ்டோக்ஸ் பேட்டில் பந்து பட்டு ஓவர் த்ரோவில் பவுண்டரி சென்றது உண்மையில் துரதிர்ஷ்டம். ஆனால், அந்த அந்த நேரத்தில் அதுபோன்று நடந்திருக்க கூடாதுதான். அதில் குறை கண்டுபிடிக்க விரும்பவில்லை. இனிமேல் வரும் காலங்களில் இதுபோன்று ஒருபோதும் நடக்கக் கூடாது.

 

நியூஸிலாந்து வீரர்கள் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடினார்கள். இறுதிப்போட்டியில் வெற்றிக்காக மிகவும் போராடினார்கள். அதை எளிதாகச் சொல்லிவிட முடியாது. எங்கள் அணி வீரர்களின் அந்த உழைப்பு கடைசிநேரத்தில் அழிக்கப்பட்டுவிட்டது. இந்த தருணத்தை என்னால் ஜீரணித்துக்கொள்வது கடினமாக இருக்கிறது. ஆனால், எங்கள் அணி வீரர்களின் உழைப்பு உண்மையில் அற்புதமானது.

இவ்வாறு வில்லியம்ஸன் தெரிவித்தார்.

 

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்