நெதர்லாந்தில் உள்ள தி ஹேக்கில் நடைபெற்ற உலகக் கோப்பை ஹாக்கித் தொடர் முதல் போட்டியில் இந்தியா, பெல்ஜியத்திடம் 2-3 என்ற கோல் கணக்கில் போராடித் தோல்வி தழுவியது.
துவக்கக் கணங்களில் பெல்ஜியம் அணியிடத்திலேயே பந்துகள் இருந்தது. இந்திய அணி அந்தப் பக்கம் சென்றாலும் பெல்ஜியத்தை பெரிதாக அச்சுறுத்தவில்லை.
ஒரேயொரு முறை மட்டும் யுவ்ராஜ் வால்மீகி ஒரு அடி அடிக்க மந்தீப் அதனை வாங்கி அடிக்கும்போது பந்து வெளியே சென்றது. மற்றபடி ஒரு முறை கூட இந்திய அணியினரால் பெல்ஜியம் வீரர்களை ஊடுருவிச் செல்ல முடியவில்லை.
ஆட்டத்தின் 18 மற்றும் 19வது நிமிடத்தில் பெல்ஜியத்திற்கு முதல் இரண்டு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதற்கான காரணத்தில் சந்தேகம் கொண்ட இந்திய அணி அது சரிதானா என்று மேல் முறையீடு செய்தனர். ஆனால் கார்னர் வாய்ப்பு தக்கவைக்கப்பட்டது. பெல்ஜியம் அடித்த கார்னர் ஷாட்டை இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் அபாரமாகத் தடுத்தார்.
இந்த இரண்டு கார்னர் வாய்ப்புகளையும் இந்தியா சமாளித்துத் தப்பித்தாலும் ஆட்டத்தில் சூடு பிடிக்கவில்லை. மீண்டும் பெல்ஜியம் அணிக்கே கோல் வாய்ப்பு வந்தது அதனை மீண்டும் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் சமயோசிதமாகத் தடுத்து நிறுத்தினார்.
29வது நிமிடத்தில் பெல்ஜியம் அணிக்குக் கிடைத்த 3வது கார்னர் வாய்ப்பையும் அது தவறவிட்டது. ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் பெல்ஜியம் மீண்டும் ஒரு தாக்குதல் ஆட்டத்தை ஆட டி-வட்டத்திற்கு சற்று வெளியேயிருந்து பெல்ஜியம் வீரர் அடித்த ஷாட்டை கோல் அருகில் இருந்த புளோரண்ட் வான் ஆபெல் அருமையாகக் கோலாக மாற்றினார். பெல்ஜியம் 1-0 என்று முன்னிலை, இடைவேளை அறிவிக்கப்பட்டது.
2, 3 கோல்களை இந்தியா வாங்கியிருக்கும் ஆனால் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷினால் இந்தியாவுக்கு வாய்ப்புகள் இன்னமும் இருந்தது.
இடைவேளைக்குப் பிறகு உத்தியை மாற்றிய இந்தியா பாதுகாப்பை சற்றே தளர்த்தி தாக்குதல் ஆட்டத்தைத் துவங்கியது. அதன் பலன் 44வது நிமிடத்தில் திடீரென ஒரு அபார மூவை இந்திய வீரர்கள் செய்ய பெல்ஜியம் எல்லைப்பகுதிக்குள் அடிக்கப்பட்ட பந்தை மந்தீப் சிங் அபாரமாக கோலாக மாற்ற அதிர்ச்சியடைந்தது பெல்ஜியம். ஆட்டம் 1-1.
பிறகு ஆட்டத்தின் 50வது நிமிடத்தில் முழு தாக்குதல் ஆட்டத்தில் இருந்த பெல்ஜியம் பாதுகாப்பில் கோட்டை விட்டது. அதனைப் பயன்படுத்தி வேகமாக பந்தை எடுத்து சென்ற ரகுநாத் ஒரு ஷாட்டை அடிக்க அதனை ஆகாஷ்தீப் அருமையான கோலாக மாற்ற இந்திய வீரர்கள் கண்களில் வெற்றி நம்பிக்கைத் தெரியத் தொடங்கியது.
ஆனால் 56வது நிமிடத்தில் பெல்ஜியம் அணிக்கு இன்னொரு பெனால்டி வாய்ப்பு கிடைக்க சைமன் கூக்நார்ட் கோலாக அதை மாற்றினார். 2-2 என்று சமன் செய்தது பெல்ஜியம்.
மீண்டும் 60வது நிமிடத்தில் தனியாகவே விடப்பட்ட ஆகாஷ்தீப் பெல்ஜியம் கோலை நோக்கி ஒரு அடி அடித்தார் ஆனால் கோல் விழவில்லை.
அதன் பிறகு பெல்ஜியம் 3வது கோலை அடிக்கும் முனைப்புடன் ஆட கோலுக்கு அருகில் பெல்ஜியம் வீரர் அடித்த ஷாட்டை கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் மீண்டும் அற்புதமாகத் தடுத்தார். பிறகு 6வது கார்னர் வாய்ப்பையும் பெல்ஜியம் கோலாக மாற்ற முடியவில்லை.
ஆட்டத்தின் 67வது நிமிடத்தில்தான் இந்தியாவுக்கு முதல் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதனை ரகுநாத் கோல்போஸ்டிற்கு மேல் அடித்து விரயம் செய்தார்.
அதன் பிறகு இருதரப்பிலும் ஆட்டம் சூடு பிடிக்க ஆட்டம் முடிய இன்னும் 15 வினாடிகளே இருக்கும் நிலையில் பெல்ஜியம் பந்தை இந்திய கோல் எல்லைக்குள் கொண்டு வந்து ஆட கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் முன்னால் வந்து தடுக்க நினைத்தார். இதனால் கோல் இடம் காலியானதைப் பயன்படுத்தி ஜான் டோமென் வெற்றிக் கோலாக மாற்றினார். இந்தியாவின் அத்தனை நேர கடின உழைப்பும் வீணானது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
52 mins ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago