விமர்சகர்களின்றி முன்னேற்றம் ஏற்படாது: அஸ்வின்

By எஸ்.தீபக் ராகவ்

ஸ்பின்னர் அஸ்வின், தனது ஆட்டம், அவர் மீதான விமர்சனங்கள், கேப்டன் தோனி கூறினால் களத்தில் உயிர்விடவும் தயார் என்று கூறியது ஆகியவை பற்றி தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி.

ஆஸ்திரேலியா தொடர், மற்றும் உலகக் கோப்பை, வங்கதேசத்தொடரில் மற்றொரு 5 விக்கெட் பவுலிங், இவற்றுடன் நீங்கள் உங்கள் கிரிக்கெட் வாழ்வின் உச்சத்தில் இருப்பதாக கருதுகிறீர்களா?

ஆம்.! நான் கிரிக்கெட் ஆடத் தொடங்கியதிலிருந்து இதுதான் எனது சிறந்த பவுலிங்காக அமைந்தது. அனுபவம் கூடக்கூட இன்னும் சிறப்பாக மாறும். நான் என்னையே ஆச்சரியத்திற்கு ஆட்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் சிறப்பாக செயல்படுவதாக நினைக்கிறேன்.

2 ஆண்டுகளுக்கு முன்பாக உங்கள் திறமைகள் மீது சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், அயல்நாட்டு மைதானங்களில் உங்கள் திறமையை நிரூபித்ததாக கருதுகிறீர்களா?

விமர்சகர்கள் இல்லையெனில் நாம் முன்னேற்றம் அடையமுடியாது. ஆனால் சிலவேளைகளில் நியாயமற்ற விமர்சனங்கள் கிரிக்கெட்டுக்குப் புறம்பாக வைக்கப்படுகின்றன.

2012-ம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்தியா வருவதற்கு முன்பாக பந்துவீச்சில் சில புதிய மாற்றங்கள் செய்துள்ளதாக தெரிவித்தீர்கள். ஆனால் தொடர் முடிந்தவுடன் நீங்கள் அளவுக்கு அதிகமாக சில முயற்சிகளை சோதனை செய்வதாக எழுந்த பார்வைகள் பற்றி...?

இவையெல்லாம் சொல்லக் காரணம் என்னவெனில் எதிரணியினரை சற்றே எச்சரிக்கை செய்யத்தான். சில சமயம் சொல்வதைச் செய்வோம், சிலசமயங்களில் செய்ய மாட்டோம், ஆனால் சொல்வதை செய்துவிடுவோம் என்று எதிரணியினரை எதிர்பார்க்கச் செய்வது நமக்கு பலன் அளிக்கலாம். நான் அந்தத் தொடரில் சோதனை முயற்சிகளைச் செய்யவில்லை.

சர்வதேச கிரிக்கெட் சில ஆச்சரியங்களை நிகழ்த்தக் கூடியது. அலிஸ்டர் குக் அந்தத் தொடரில் அபாரமாக விளையாடினார். அந்தத் தொடரில் எனக்கு சிக்கல் ஏற்பட்டது. என்னுடைய பந்து வீச்சு ஆக்சன் கொஞ்சம் என்னை பிரச்சினைப்படுத்தியது. ஆனால் அவை அடையாளம் காணப்படவில்லை. அப்போது விமர்சனங்களை எனக்கு சாதகமாகப் பயன்படுத்தி மீண்டும் வலுவாக திரும்பினேன்.

சில நாட்களுக்கு முன்பாக நீங்கள் உங்கள் உயரம் மற்றும் அதனைப் பயன்படுத்தும் பந்து வீச்சு பற்றி கூறும்போது, பக்கவாட்டாக ஸ்பின் செய்வது மற்றும் டாப் ஸ்பின் பற்றி கூறியிருந்தீர்கள், ஆனால் உலகக் கோப்பையில் பார்த்தபோது உங்கள் பந்துகளில் பக்கவாட்டு சுழற்சி அதிகம் இருந்தது. இதனை எப்படி கொண்டு வந்தீர்கள்?

ஆஸ்திரேலிய பிட்ச்களில், குறிப்பாக ஆஃப் ஸ்பின்னர் ஒருவர் பந்தை சுழலச் செய்து, திரும்பச் செய்யவேண்டுமென்றால் கடினம்தான். மேலும் நாம் நமது ஆட்டத்தின் உச்சத்தில் இருக்க வேண்டும். ஆனால் ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பாகவே நான் தயாரிப்புகளில் ஈடுபட்டேன். நான் டெஸ்ட் அணியில் சிலகாலம் இல்லை, இந்தக் காலக்கட்டம் என்னை நான் மீண்டும் கண்டுபிடித்துக் கொள்ள உதவியது. இதன் மூலம் அடுத்த கட்டத்துக்கு உயர வாய்ப்பு கிடைத்தது. இந்தக் காலக்கட்டத்தில் எத்தனை வகையான ஆஃப் ஸ்பின்னர்களை வீச முடியும் என்பதை கற்றுக் கொண்டேன், ஆஸ்திரேலியாவின் குகாபரா பந்தில் பயிற்சி மேற்கொண்டேன்.

ஆனால் பக்கவாட்டு ஸ்பின், மேல்புற ஸ்பின் என்பதெல்லாம் ஒருபவுலரின் கவனத்தில் இருக்காது. ஒவ்வொரு பவுலரும் வித்தியாசமானவர்கள். பக்கவாட்டில் பந்தை திருப்புவர்களுக்கு டாப் ஸ்பின் வராது, அதே போல் டாப் ஸ்பின் வீசுபவர்கள் பக்கவாட்டு ஸ்பின்னுக்கு சற்றே சிரமப்படுவர். ஆனால் பந்தின் தையலை விதம் விதமாக மாற்றி கிரிப் செய்து சுழற்பந்தை விதம் விதமாக வீசுவதில் நான் தேறியிருக்கிறேன் என்றே கருதுகிறேன்.

2011-12 ஆஸி.தொடருக்கும் கடந்த தொடருக்கும் என்ன வித்தியாசம்?

ரன்கள் முக்கியம். ரன்கள் நமக்கு பக்கபலமாக இருக்கும் போது பவுலர்கள் வித்தியாசமாக வீச முயற்சி செய்யலாம். எதிரணி பேட்ஸ்மென்களே அணுகுமுறையை மாற்றிக் கொள்வர். ஆனாலும் 2011-12 தொடரில் 2 அல்லது 3 ஸ்பெல்கள் அசாதாரணமாகவே வீசினேன் என்று கருதுகிறேன். அந்த ஸ்பெல்கள்தான் சர்வதேச கிரிக்கெட்டில் நான் வீசிய சிறந்த ஸ்பின் பந்து வீச்சாக இருக்கும் என்றே கருதுகிறேன். அந்த தொடரில், அடிலெய்ட் டெஸ்டில் காலையில் வீசிய ஸ்பெல், முதல் நாள் மதியம் மற்றும் மெல்பர்னில் 3ம் நாள் மாலை வீசிய ஸ்பெல் இவை நான் வீசிய ஆகச்சிறந்த ஸ்பெல்கள் என்று கூறலாம்.

இவை பற்றி அதிகம் எழுதப்படாமல் போகலாம் விக்கெட்டுகள் விழாமல் போகலாம். ஆனால் இந்த முறை நான் எனது திட்டங்களை மாற்றும் முடிவுடன் ஆஸ்திரேலியா செல்லவில்லை. மேலும் ஆஸ்திரேலியாவில் 6 பந்துகளையும் தூக்கி வீசக்கூடாது. இதை இந்தியாவில் செய்யலாம். நான் எனது இயல்புகளையே எதிர்த்து ஆடவேண்டியுள்ளது, ஆனால் இதுவும் எனக்கு மகிழ்ச்சியாகவே உள்ளது.

புதிய ஒருநாள் போட்டி விதிகள் பற்றி...

புதிய விதிகளால் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு விடாது. பெரும்பான்மையான ஓவர்களில் 4 பீல்டர்களே 30 யார்டு வட்டத்துக்கு வெளியே இருப்பார்கள். சவால் என்பது மாறாது. நான் இன்னமும் புதிய விதிகளில் ஆடவில்லை எனவே அதைப்பற்றி அதிகம் கூற முடியாது.

அணித்தலைவருக்கு நீங்கள் ஆதரவு அளித்த விதம் அணிக்குள் கோஷ்டிகள் இருப்பதான பார்வையை ஏற்படுத்தியுள்ளதே?

நான் இப்பவும் அதையே கூற விரும்புகிறேன். நான் அணித் தலைவராக இருந்தால் சக வீரர்கள் என்னை நண்பராக பாவிப்பதையே விரும்புவேன். எனவேதான் ஒரு அணியின் தலைவர் வீழ்ச்சியில் இருக்கும் போது அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். நாம் ஒரு நல்ல அணி வீரர் என்பதற்காகவே அணித்தலைவரை ஆதரிக்க வேண்டும் என்ற கருத்தில் கூறினேன். ஆனால் அதற்காக நான் கூறிய உதாரணம் இன்னும் சற்று கவனத்துடன் கூறப்பட்டிருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்கிறேன்.

புதிய சீசனுக்காக் புது பந்து வீச்சு முறை ஏதேனும் தயாரித்துள்ளீர்களா?

ஒவ்வொரு நாளும் ஒன்றரை மணி நேரம் பயிற்சியை மேற்கொள்கிறேன், யோகாவில் ஈடுபட்டு வருகிறேன். நான் எனது ஆட்டம் பற்றி அதிகம் யோசிப்பவனாக இருக்கிறேன், இது ஆரோக்கியமானதல்ல. புதிய பந்து வீச்சு உத்தி குறித்து கூற வேண்டுமென்றால், மனதில் ஒரு சிலதை வைத்திருக்கிறேன், அதனை அமல் படுத்த வேண்டும், 20 நாட்களில் இந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியும் என்று கருதுகிறேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்