சிலியில் நடைபெறும் கோப்பா அமெரிக்கா தென் அமெரிக்க கால்பந்து தொடரின் அரையிறுதியில் மெஸ்ஸி 5 கோல்களுக்கு களம் அமைத்து கொடுக்க பராகுவே அணியை அர்ஜெண்டினா அணி 6-1 என்ற கோல் கணக்கில் நொறுக்கி, இறுதிக்குள் நுழைந்தது.
இறுதிப் போட்டியில் சிலியை சந்திக்கிறது அர்ஜெண்டினா.
நேற்று லயோனல் மெஸ்ஸி, தென் அமெரிக்க கால்பந்து அணிகளுக்கு எதிராக அதிக கோல்களை அடிக்க முடியவில்லையே என்று வருந்தினார், ஆனால் அதுதான் தென் அமெரிக்க கால்பந்து என்று சமாதானமும் செய்து கொண்டார். இந்நிலையில் அரையிறுதியில் பராகுவேயை 6 கோல்கள் அடித்து வீழ்த்த 5 கோல்களுக்கு களம் அமைத்துக் கொடுத்தார். அதுவும் ஒரு சமயத்தில் பராகுவே அணி வீரரின் கால்களுக்கு இடையே பந்தை செலுத்தி செய்த ஆச்சரியமான பாஸ் பராகுவே அணியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
முதல் பாதியில், மார்கஸ் ரோஜோ, ஜேவியர் பாஸ்டர் அடித்த கோல்களுக்கு உதவிய மெஸ்ஸி, இடைவேளைக்குப் பிறகு ஆஞ்செல் டி மரியா அடித்த 2 கோல்களில் ஒன்றிற்கு களம் அமைத்துக் கொடுத்தார். மேலும் கடைசி 2 கோல்களை செர்ஜியோ அகியுரோவும், கொன்சாலோ ஹிகுயெய்ன் அடித்த கோல்களுக்கும் களம் அமைத்துக் கொடுத்தார் மெஸ்ஸி.
டி மரியா அடித்த அணியின் 4-வது கோல்தான் மெஸ்ஸியினால் என்ன முடியும் என்பதற்கு சிறந்த உதாரணமாக அமைந்தது. நடுக்களத்திற்கு அருகில் இருந்து பந்தை எடுத்துச் சென்ற மெஸ்ஸி, சுமார் 3 தடுப்பாட்ட வீரர்களுக்கு தனது அபாரமான மூவினால் போக்குக் காட்டி கடத்தி பந்தை எடுத்து வந்தார். அதில் ஒரு தடுப்பாட்டக் காரர் கால்களுக்கு இடையே பந்தை செலுத்தினார் மெஸ்ஸி. அதைத்தான் டி மரியா கோலாக மாற்றினார். இந்த கோல் மெஸ்ஸியின் ஜீனியஸுக்கு ஒரு அத்தாட்சி என்றால் மிகையாகாது.
இந்தப் போட்டிக்கு முன்பாக 4 கோல்களையே அடித்திருந்தது அர்ஜெண்டினா.
ஆட்டத்தின் பெரும்பகுதி ஆதிக்கம் செலுத்திய அர்ஜெண்டினா 15-வது நிமிடத்தில் மெஸ்ஸியின் ஃப்ரீ கிக்கை ரோஜோ கோல் அடித்ததன் மூலம் முன்னிலை பெற்றது. மெஸ்ஸியின் பிரீ கிக் கோல் வட்டத்துக்குள் வர பராகுவே தடுப்பாட்ட வீரர்கள் பந்தை விரட்ட முடியாமல் தோல்வி அடைந்தனர். ரோஜோ 6 யார்டுகள் முன்னாலிலிருந்து முதல் கோலை அடித்தார்.
பிறகு 27-வது நிமிடத்தில் மெஸ்ஸியிடம் பந்து வர அவர் அதனை மிக அழகாக பாஸ்டரிடம் கொடுத்தார். அது மிகவும் துல்லியமான பாஸ் பாஸ்டர் அதனை கோலாக மாற்றினார்.
அதன் பிறகு டி மரியா இடைவேளை கழிந்து 2வது நிமிடத்தில் பராகுவே தடுப்பாட்ட வீரர்கள் இல்லாத நிலையில் சுலபமான கோலை அடித்தார். இதற்கு 5 நிமிடங்கள் சென்ற பிறகுதான், மெஸ்ஸி நடுக்களத்திலிருந்து பந்தை கடத்தி எடுத்து வந்து 3 தடுப்பாட்ட வீரர்களையும் கடந்து, அதில் ஒருவரின் காலுக்கு இடையில் பந்தை செலுத்த பாஸ்டர் அந்தப் பந்தை பெற்று, கோல் நோக்கி அடிக்க பராகுவே கோல் கீப்பர் ஜஸ்டோ வில்லார் அதனை தடுக்க, பந்து மீண்டும் திரும்பி வந்தது. அப்போது கோல் காலியாக இருக்கவே, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி டி மரியா கோல் அடித்தார்.
80-வது நிமிடத்தில் அகுயெரோ ஒரு அருமையான தலை கோல் அடிக்கக் காரணமாயிருந்ததும் மெஸ்ஸியின் ஆட்டம், பிறகு 6-வது கோலை ஹிகுயென் அடிக்கவும் மெஸ்ஸியின் அருமையான பாஸே காரணம்.
மெஸ்ஸியே 2 கோல்களை அடித்திருப்பார். ஒன்று 30-வது நிமிடத்தில் ஃப்ரீ கிக் ஒன்று அழகாக சுழன்றபடியே வந்தது அருகாமையில் கோல் இலக்கை இழந்தது. 68-வது நிமிடத்தில் அருகில் இருந்து மெஸ்ஸி அடித்த ஷாட்டை கோல் கீப்பர் வில்லார் தடுத்தார்.
பராகுவே அணிக்காக ஸ்ட்ரைக்கர் லூகாஸ் பேரியாஸ் ஒரே கோலை அடித்தார்.
சாம்பியன் பட்டம்:
அர்ஜெண்டினா-சிலி அணிகள் இறுதிப் போட்டியில் சனிக்கிழமை மோதுகின்றன. கோப்பா அமெரிக்காவில் சாம்பியன் பட்டம் வென்று அர்ஜெண்டின அணிக்கு 22 ஆண்டுகள் ஆகிறது, மேலும் ‘லைட்னிங் மெஸ்ஸி’ அணியில் இருக்கும் போது வென்றால் இதுவே முதல் சாம்பியன் பட்டமாகும்.
அர்ஜெண்டினா அணி 1993 கோப்பா அமெரிக்கா சாம்பியன் பட்டம் வென்ற போது லயோனல் மெஸ்ஸிக்கு 6 வயது.
இதுவரை கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரில் சிலியிடம் அர்ஜெண்டினா தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பராகுவே அணியும் கோப்பா அமெரிக்க கால்பந்து தொடரில் 24 போட்டிகளில் அர்ஜெண்டினாவை வீழ்த்தியதில்லை.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
56 mins ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago