விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் முன்னாள் சாம்பிய னான ஸ்பெயினின் ரஃபேல் நடால் அதிர்ச்சி தோல்வி கண்டு போட்டி யிலிருந்து வெளியேறியுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் இருமுறை சாம்பியன் பட்டம் வென்றவரான நடால் தனது 2-வது சுற்றில் 5-7, 6-3, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் சர்வதேச தரவரிசையில் 102-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனியின் தகுதி நிலை வீரரான டஸ்டின் பிரவுனிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார். இந்த ஆட்டத்தில் டஸ்டின் பிரவுன் 13 ஏஸ் சர்வீஸ்களை விளாசியது குறிப்பிடத்தக்கது.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி யில் 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றவரும், 2006, 2007, 2011 ஆகிய ஆண்டு களில் இறுதிச்சுற்று வரை முன்னேறி யவருமான நடால், தொடர்ந்து 4-வது ஆண்டாக ஆரம்ப சுற்றுகளி லேயே வெளியேறியிருக்கிறார்.
2012-ம் ஆண்டில் 2-வது சுற்றில் செக்.குடியரசின் லூகாஸ் துலோகி யிடம் வீழ்ந்த நடால், 2013-ல் முதல் சுற்றில் ஸ்டீவ் டார்சிஸ்ஸிடம் (சர்வதேச தரவரிசை 135), தோல்வி கண்டார். கடந்த ஆண்டு 4-வது சுற்றில் நிக் கிர்ஜியோஸிடம் (சர்வதேச தரவரிசை 144) சரண் அடைந்த நடால், இந்த முறை 2-வது சுற்றில் தகுதி நிலை வீரரிடம் தோற்றிருக்கிறார். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் தகுதி நிலை வீரரிடம் நடால் தோற்பது இதுவே முதல்முறையாகும்.
பிரெஞ்சு ஓபனில் 9 முறை சாம்பியன் பட்டம் வென்று முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த நடால், இந்த ஆண்டு காலிறுதியோடு வெளியேறியதால், தரவரிசையில் 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்த நிலையில் இப்போது விம்பிள்டனில் அதிர்ச்சி தோல்வி கண்டுள்ள நடால், மேலும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
ஓய்வு பெறும் எண்ணமில்லை
விம்பிள்டனில் தொடர்ந்து 4-வது ஆண்டாக ஆரம்ப சுற்றுகளில் தோற்றிருந்தாலும் டென்னிஸிருந்து ஓய்வு பெறும் எண்ணமில்லை என ரஃபேல் நடால் தெரிவித் துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: இந்த ஆட்டத்தில் தோற்றதால் நிச்சயம் வருத்தமடைந்திருக்கிறேன். ஆனால் விளையாட்டு என்று வந்துவிட்டால் அதில் நல்ல தருணங்களையும், மோசமான தருணங்களையும் சந்தித்தாக வேண்டும். இன்றைய தினம் (நேற்று) நிச்சயமாக எனக்கு மோசமான தருணம். இதுபோன்ற தோல்வியை ஏற்றுக்கொள்வது அவசியம்.
இந்த ஆட்டத்தோடு என்னுடைய டென்னிஸ் வாழ்க்கை முடிந்துவிட வில்லை. வாழ்க்கை தொடர்கிறது. அதேபோன்று நான் தொடர்ந்து விளையாடுவேன். எனது பழைய பார்முக்கு திரும்புவதற்காகவும், மீண்டும் முன்னணி வீரராக உருவெடுப்பதற்காகவும் முன்னெப் போதும் இல்லாத வகையில் கடுமையான பயிற்சியில் ஈடுபடுவேன்.
2012, 2013-ம் ஆண்டுகளில் முழு உடற்தகுதியுடன் இல்லை. ஆனால் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் எனது முழங்காலில் பிரச்சினை எதுவும் இல்லை. சவால் அளிக்கும் வகையிலான ஆட்டத்தை விளையாடுவதற்கு தயாராகவே இருந்தேன். ஆனாலும் தோல்வியடைந்தேன். 2008, 2010, 2007, 2006, 2011-ம் ஆண்டுகளில் உச்சக்கட்ட பார்மில் இருந்தேன். அதேஅளவு பார்முக்கு மீண்டும் திரும்ப முடியுமா என தெரியவில்லை.
விம்பிள்டன் சாதனை
விம்பிள்டனில் எனது சாதனை யை நினைத்து எப்போதுமே பெருமை கொள்வேன். பழைய நிலைக்கு திரும்ப முயற்சிப்பேன். அதற்காக தீவிரப் பயிற்சியில் ஈடுபட போகிறேன். இதற்கு முன்னர் கடுமையாக உழைத்தி ருக்காவிட்டால் விம்பிள்டனில் 5 முறை சிறப்பாக விளையாடி இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்க முடியாது. அதனால் விம்பிள்டனைப் பொறுத்த வரையில் எனது ஆட்டம் மோசமில்லை.
இன்றைய ஆட்டத்தில் நல்ல தோல்வியைத்தான் சந்தித்திருக் கிறேன். நான் பார்மில் இல்லாத போது தோல்வியை சந்தித்தால் அதை ஏற்றுக்கொள்வேன். மற்றொ ருவர் என்னைவிட சிறப்பாக விளையாடும்போது அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என ஒருபோதும் நான் நினைத்ததில்லை என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago