சென்னை லீக் சீனியர் டிவிசன் கால்பந்து போட்டியில் ஹிந்துஸ் தான் ஈகிள்ஸ்-சென்னை சுங்கத் துறை அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. முன்னதாக தான் விளையாடிய 5 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக தோல்வி கண்டிருந்த ஈகிள்ஸ், முதல்முறையாக டிரா செய்து தோல்வியிலிருந்து தப்பியுள்ளது.
சென்னை நேரு மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியின் 14-வது நிமிடத்தில் சுங்கத்துறை வீரர் மனோ கோலடிக்க, அடுத்த 5-வது நிமிடத்தில் ஹிந்துஸ்தான் ஈகிள்ஸ் பதிலடி கொடுத்தது. அந்த அணியின் கார்த்திக் இந்த கோலை அடித்தார்.
இதன்பிறகு முதல் பாதி ஆட்டம் மட்டுமின்றி, 2-வது பாதி ஆட்டத்திலும் கோல் எதுவும் விழவில்லை. இதனால் போட்டி டிராவில் முடிந்தது. சுங்கத்துறை கோல் கீப்பர் அருண் பிரதீப் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக நடைபெற்ற முதல் டிவிசன் லீக்கில் நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. அந்த அணியின் சாம்சன், ஐசக், சயீத் காசிம் ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago